பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பன்றிக் காய்ச்சல் உறுதி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

By vinoth kumarFirst Published Sep 28, 2022, 1:56 PM IST
Highlights

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றிக் காய்ச்சல் உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றிக் காய்ச்சல் உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக டெங்கு, இன்ஃபுளுயன்சா போன்ற காய்ச்சலால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகதத்தில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;- எங்க அப்பா மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன்.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.. துரை வைகோ அதிரடி

இதனையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், நெகட்டிவ் என முடிவு வந்தது. பின்னர், அவருக்கு டெங்கு என கூறப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பன்றிக்காய்ச்சல் உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தற்போது, தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு பிறகு வீடு திரும்புவார் என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- திமுக மாவட்ட செயலாளர்கள் 7 பேர் மாற்றமா..? சாட்டையை சுழற்றிய மு.க.ஸ்டாலின்

click me!