திமுக கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பதுதான் பள்ளிக் கல்வித் துறையின் வேலையா? விடாமல் இறங்கி அடிக்கும் அண்ணாமலை.!

By vinoth kumarFirst Published Aug 25, 2022, 7:02 AM IST
Highlights

கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.

திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தார். கோவை மாவட்டம் ஈச்சனாரியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவிற்கு மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை கொடுக்க முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க;- “3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.

மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? என்று அண்ணாமலை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க;- பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி… காரணம் இதுதான்… அண்ணாமலை டிவீட்!!

click me!