
வானூரில் அருகே பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகளை பெண் பயனாளி கம்சலா என்ற பட்டியல் இன பெண் மூலம் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியில் நிம்மதியாக உள்ளோம் என மக்கள் கூறுவதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ரிப்பன் வெட்டிய பெண்
விழுப்புரம் மாவட்டம் வானூரில் அருகே கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் கழிவறை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஒரு வீட்டின் பயனாளியான கம்சலா என்ற பட்டியல் இன பெண்ணை வைத்து ரிப்பன் வெட்ட வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுகளை பயன்பாட்டிற்கு வழங்கினார்.
இதனையடுத்து, வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை திறந்து வைத்த பின் மற்றொரு பயனாளியான ஒரு பெண்ணை வைத்தே ஒரு வீட்டை திறந்து வைத்தார்.
வாலிபால் விளையாடி ஸ்டாலின்
இதனையடுத்து, சமத்துவபுர வளாகத்தில் அங்கன்வாடி மைய வளாகம், நூலகம் உள்ளிட்டவைகளை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, கட்டிட வளாகத்தில் வெளியே வந்த முதலமைச்சர் வெளியே விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களை ஊக்குவித்து அவர்களுடன் இணைந்து வாலிபால் விளையாடி மகிழ்ந்தார்.