
தமிழகத்துக்கு இந்த மாத இறுதிக்குள் 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று உச்சநிதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு திட்டமிட்டபடி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவில்லை. அதே நேரத்தில் செயல் திட்டம் ரெடியாக இருப்பதாகவும் மத்திய அமைச்சரைவையின் ஒப்புதல் பெற்ற பின் தாக்கல் செய்யப்படும் என்றும் அதற்கு 2 வார கால அவகாசம் வேண்டும் அஎன்றும் மத்திய அரசு சார்பில் வாதிட்ப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழகத்துக்கு இந்த மாத இறுதிக்குள் 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்றும் உத்தவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க வேண்டும் என்று உத்தவிட்டனர்.