ஜிமிக்கி கம்மல், முறுக்கு மீசையா? இப்படியெல்லாம் ஸ்டைல் காட்ட கூடாது... பள்ளிகல்வித்துறை பளீர்...

Asianet News Tamil  
Published : May 03, 2018, 11:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
ஜிமிக்கி கம்மல், முறுக்கு மீசையா? இப்படியெல்லாம் ஸ்டைல்  காட்ட கூடாது... பள்ளிகல்வித்துறை பளீர்...

சுருக்கம்

jimmi kammal not allowed

கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு ஸ்டைலாக வர ஆரம்பித்தனர். அதுமட்டுமல்லாமல், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என இதை முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில்

மாணவர்கள் 9.15மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.

மாணவிகள் ஜிமிக்கி கம்மல் அணிந்து வரக்கூடாது.

மாணவர்கள் பேண்ட் லோ ஹிப்பிலோ, டைட் பிட்டாகவோ  அணிந்து வரக்கூடாது.

அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும் சட்டையை இறுக்கமாக அணிந்து வரக்கூடாது.

மாணவர்கள் அணியும் சட்டையின் நீளம் ‘டக் இன்’ செய்யும் போது வெளியில் வராத வகையில் இருக்கவேண்டும்.

சீரற்ற முறையில் ‘இன்’ பண்ணக்கூடாது கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.

கை,கால் நகங்கள், தலைமுடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.

மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருக்க கூடாது.

கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.

பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

பைக், செல்போன்,ஸ்மார்ட் போன்  கொண்டு வர அனுமதியில்லை.

மீறி கொண்டுவந்தால் அவையாவும் பறிமுதல் செய்யப்படும்.

பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில்தான் பள்ளி வரவேண்டும்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!