அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு... டிச.12க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

Published : Dec 06, 2022, 09:12 PM IST
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு... டிச.12க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

சுருக்கம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று உயா்நீதிமன்ற தனி நீதிபதி தீா்ப்பளித்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அம்பேத்கரின் விசிவாசிகளாக பாஜகவினரை ஏற்க முடியாது… திருமுருகன் காந்தி கருத்து!!

இந்த வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட இபிஎஸ் தரப்பு கோரியது.

இதையும் படிங்க: 2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !

மேலும் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும், தேர்தல் ஆணையத்தின் செயல்பட்டால் கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது. எனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகததால் வழக்கை ஒத்திவைக்க கோரினர். இதையடுத்து வழக்கு டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!