Jai Bhim: பாமக ரவுடி கும்பலிடம் இருந்து சூர்யாவை காப்பாற்றுங்கள்.. ஸ்டாலின் அரசை நெருக்கும் விசிக..!

Published : Nov 16, 2021, 12:46 PM IST
Jai Bhim: பாமக ரவுடி கும்பலிடம் இருந்து சூர்யாவை காப்பாற்றுங்கள்.. ஸ்டாலின் அரசை நெருக்கும் விசிக..!

சுருக்கம்

நடிகர் சூர்யாவை மிரட்டும் பாமக ரவுடிக்கும்பலை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும். நடிகர் சூர்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவை மிரட்டும் பாமக ரவுடிக்கும்பலை தமிழக காவல்துறை கைது செய்து, அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.

சூர்யா தயாரிப்பு, நடிப்பிலும் ஞானவேல் இயக்கத்திலும் வெளியான‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். படம் வரவேற்பைப் பெற்ற போதிலும், உண்மை நிகழ்வில் அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியதும், வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி சட்டி காலாண்டர் இடம்பெற்றதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து அந்த காலண்டர் காட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவும் பதில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடங்களில் பாமகவினர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

அதேநேரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக திருமாவளவன், முத்தரசன், கே.பாலாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர். மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபையும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது டுவிட்டரில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும் பாமகவுக்கு எதிராகவும் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- "நடிகர் சூர்யாவை மிரட்டும் பாமக ரவுடிக்கும்பலை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும். நடிகர் சூர்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

அதேபோல மற்றொரு டுவீட்டில்;- "ஆதிக்கத்தை தக்க வைக்கத்துடிப்போருக்கும் அந்த ஆதிக்கத்தை தகர்க்க நினைப்போருக்கும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். சமத்துவம் நிலைநாட்டும் வரை. நடிகர் சூர்யா சமத்துவம் பக்கம் நிற்கிறார். பாமக கும்பல் ஆதிக்கம் பக்கம் நிற்கிறது. #weStandwithSurya" என பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TN Politics: தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? உஷாராகும் விசிக, இடதுசாரிகள்.. ஸ்டாலினுக்கு சிக்கல்!
Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!