சாத்தான்குளம் சம்பவம்; ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு நாளை வேலைக்கான அரசாணை வழங்குகிறார் முதல்வர்.!

Published : Jul 26, 2020, 10:51 PM ISTUpdated : Jul 26, 2020, 10:53 PM IST
சாத்தான்குளம் சம்பவம்; ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு  நாளை வேலைக்கான அரசாணை வழங்குகிறார் முதல்வர்.!

சுருக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிக்கான பணிநியமன ஆணையை நாளை வழங்க இருக்கிறார்.

 சென்னை தலைமை செயலகத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிக்கான பணிநியமன ஆணையை நாளை வழங்க இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று இரவு இவர்கள் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், ஊரடங்கு தடையை மீறி கடையை நடத்தக்கூடாது என்றும், எனவே, கடையை அடைக்கும்படி கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டதால் காவல்நிலையத்திற்கு அழைத்து போய் தாக்கியதில் தந்தையும் மகனும் சிறையில் இருக்கும் போது அடுத்தடுத்த நாள் உயிரிழந்த சம்பவம் உலகத்தையே உலுக்கி எடுத்தது.இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.


 இச்சம்பவத்தில் பலியான இருவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண நிதியாக 10லட்சம் அறிவித்தார். அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு பணி சென்னை தலைமைச்செயலகத்தில் வழங்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!