சசிகலாவின் வருகை... நொந்து கொள்ளும் டி.டி.வி.தினகரன்..!

Published : Feb 12, 2021, 10:53 AM IST
சசிகலாவின் வருகை... நொந்து கொள்ளும் டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

நான் ஏதாவது ஒரு வார்த்தை கண்ணியக் குறைவாக பேசி இருக்கிறேனா? கட்சி ஆரம்பித்தது அதிமுகவை மீட்டெடுக்க என்று நான் சொன்னது தப்பா?

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என வியூகங்கள் வெளியாகி வரும் நிலையில், சென்னை தி.நகரில் தங்கியுள்ள சசிகலாவை இன்று 12.02.2021 சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

அப்போது பேசிய அவர், ’’அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது. அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமுமுகவை ஆரம்பித்தோம். பேசுபவர்கள் பேசட்டும். காலம் அவர்களுக்குப் பதில் சொல்லும். ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவர்கள், ஒரு முதலமைச்சராக இருப்பவர்கள் எப்படிப் பேச வேண்டும் என்கின்ற ஒரு வரைமுறை கூட இல்லாமல், சாலையில் நின்று எப்படி எல்லாம் காட்டுமிராண்டித்தனமாக பேசுகிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவார காலமாக ஒரு சிலர் ஏன் ரொம்ப பதறுகிறார்கள். என்ன காரணம். நாங்களாக வந்தோம், நாங்களாக இருக்கிறோம். நான் ஏதாவது ஒரு வார்த்தை கண்ணியக் குறைவாக பேசி இருக்கிறேனா? கட்சி ஆரம்பித்தது அதிமுகவை மீட்டெடுக்க என்று நான் சொன்னது தப்பா?" என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு
சுடச்சுட ரெடியாகும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்! கனிமொழி தலைமையில் தயாராக போகும் தேர்தல் நாயகன்!