சசிகலா அரசியலில் இருந்து விலகல்... பின்னணியில் திமுக... அதிர்ச்சித் தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Mar 4, 2021, 2:50 PM IST
Highlights

தனது விலகலால் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்படும் முடிவைப் பொறுத்தே, தன்னுடைய முடிவை அவர் மாற்றுவாரா, அப்படியே ஒதுங்கிவிடுவாரா என்பது தெரியும்

ஒரே அறிக்கை, ஒட்டு மொத்தமாக தமிழக அரசியல் களத்தையே நேற்று உலுக்கிவிட்டது. சசிகலாவின் அரசியல் விலகல் அறிவிப்பு, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, அமமுக என கட்சியினரிடம் மட்டுமல்லாது பொதுமக்கள் தரப்பிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலாவினுடைய ‘அரசியல் விலகல்’ அறிக்கையின் பின்னணியில் இருப்பது மிகவும் இயல்பான காரணங்கள்தான் என்று அடித்துச்சொல்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். சசிகலாவின் நடவடிக்கைகளையும் அவருடைய எண்ண ஓட்டங்களையும் அறிந்த அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசியபோது அந்த இயல்பான காரணங்களை அவர்கள் அடுக்கினர்.

அப்போது, பலரும் யூகிப்பதைப் போல சின்னம்மாவின் இந்த முடிவுக்கு யாருடைய நிர்பந்தமும் அழுத்தமும் காரணமில்லை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பலவீனமடைந்தே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. சிறையிலிருக்கும்போதும், சிறையை விட்டு வெளியே வந்தபோதும் அதிமுகவில் தனக்கு மீண்டும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட, அதிமுக பலவீனமாகி, திமுக மீண்டும் பலமாகி ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணம்தான் அவரிடம் மேலோங்கி இருந்தது. அதற்குக் காரணம், அடிப்படையாகவே திமுக மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு. அவர் சிறைக்குப் போவதற்கு யார் யாரோ பின்னணியில் இருந்தனர் என்று பலர் பேசினாலும், தான் சிறைக்குப் போகவும், அம்மா (ஜெயலலிதா) மரணமடையவும் திமுக போட்ட வழக்குதான் காரணமென்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

தனது விலகலால் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்படும் முடிவைப் பொறுத்தே, தன்னுடைய முடிவை அவர் மாற்றுவாரா, அப்படியே ஒதுங்கிவிடுவாரா என்பது தெரியும்!’’ என்றார்கள்.

click me!