மதவாதம் தலைதூக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் திமுகவுடன் கூட்டணி... திருமாவளவன் அதிரடி..!

By vinoth kumarFirst Published Mar 4, 2021, 2:36 PM IST
Highlights

தமிழகத்தில் பாஜக, சங்பரிவார அமைப்புகளால் காலூன்ற முடியாத நிலை உள்ளது. கலைஞர், ஜெயலலிதா இல்லாத தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த பாஜக முயற்சி செய்கிறது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். 

சென்னை அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன்;- 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும்  6 தொகுதிகளை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியில் எதிர்ப்பு இருந்தாலும் வாக்குகள் சிதறக்கூடாது என உடன்பாடு ஏற்பட்டது. தமிழகத்தை சனாதன பேராபத்தில் இருந்து காப்பாற்ற திமுகவுடன் கூட்டணி  வைத்துள்ளோம்.

தமிழகத்தில் பாஜக, சங்பரிவார அமைப்புகளால் காலூன்ற முடியாத நிலை உள்ளது. கலைஞர், ஜெயலலிதா இல்லாத தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த பாஜக முயற்சி செய்கிறது. புதுச்சேரியில் அநாகரிக அரசியலால் காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்ந்துள்ளது. அதுபோன்று தமிழகத்தை மாற்ற பாஜக தீவிரமாக செயல்படுகிறது. 2017ல் இருந்தே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்திகள் கட்சி  இணைந்து செயல்பட்டு வருகிறது . திமுக வழங்கிய 6 தொகுதிகளை ஏற்று போட்டியிடுவது என்று முடிவெடுத்துள்ளோம். 6 தொகுதிகளை ஏற்க கூடாது என்று உயர்நிலை செயல்திட்டக்குழுவில் வலியுறுத்தினர்.

6 தொகுதிகளை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியில்  எதிர்ப்பு இருந்தாலும் வாக்குகள் சிதறக்கூடாது என உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும். 6 தொகுதிகளில் பொதுத் தொகுதி உள்ளதா என்பது குறித்து பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறினார்.

click me!