அவர் சீக்கிரம் வருவாரு ! பிரிஞ்சு போன கட்சியை இணைப்பாரு ! யாரைச் சொல்கிறார் தெரியுமா ஜோதிடர் பாலாஜி ஹாசன் !!

Published : Aug 01, 2019, 10:25 PM IST
அவர் சீக்கிரம் வருவாரு ! பிரிஞ்சு போன கட்சியை இணைப்பாரு ! யாரைச் சொல்கிறார் தெரியுமா  ஜோதிடர்  பாலாஜி ஹாசன் !!

சுருக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் வெளியே வருவார் என்றும், பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றாக இணைப்பார் என்றும் சேலம் ஜோதிடத் பாலாஜி ஹாசன் கூறியிருப்பது அமமுகவினரை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துள்ளது.  

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன். இவர் கடந்த ஆண்டு  ஒரு தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்ட போது, இந்த ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று கூறினார். 

அவர் கூறியது போல் அவர் சொன்ன அணிகளே அரையிறுதிக்கும், இறுதி போட்டிக்கும் சென்றது. அதே போல் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின். துர்கா ஸ்டாலின், போன்றோர் குறித்தும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அண்மையில்  அவர் கூறிய கணிப்பால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

 

இந்த நிலையில் மீண்டும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசிய ஜோதிடர் பாலாஜி ஹாசன்,  சசிகலா விரைவில் விடுதலையாகி வருவார் என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற கட்சியை இணைப்பார் என்றும் தெரிவித்தார். 

மேலும் கட்சியை இணைக்கும் போது ஒரு சில நபரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறியுள்ளார். இவர் பேசிய வீடியோவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர்.     

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!