சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும் நாளை கர்நாடகா லீவு விட்டு, திருவிழாவாக கொண்டாடுமா!! ஆச்சர்யத்தில் அமமுகவினர்...

By sathish kFirst Published May 12, 2019, 4:46 PM IST
Highlights

சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வரும் நாள் கர்நாடகாவில் கோலாகலமான விழாவாக இருக்கும் எனத் தெரிகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வரும் நாள் கர்நாடகாவில் கோலாகலமான விழாவாக இருக்கும் எனத் தெரிகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்கு சென்று இரண்டு வருடம் ஆகியுள்ளது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுமையடையும் முன்பே  சிறையில் இருந்து அவர் வெளியே வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

சசிகலாவிற்கு அபராதமாக விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய்யை  இன்னும் சில நாட்களில் செலுத்த உள்ளார்.  இதற்கு அடுத்தபடியாக டிஐஜி ரூபா சசிகலா மீது கொடுத்து இருக்கும்  ரூபாய் லஞ்ச புகாரில் இருந்து வெளியே வந்துவிட்டால்,  ரிலீஸில் சிக்கல் இருக்காது. ஜூலை மாத இறுதிக்குள் இந்த புகாரில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று சசிகலா குடும்பத்தினர் நம்புகின்றனர். 

இந்நிலையில் சசிகலா நன்னடத்தை விதியை வைத்து சிறையில் இருந்து இன்னும் 5 லிருந்து 6 மாதங்களில் ரிலீஸ் ஆவார் என சொல்லப்படுகிறது. அதாவது, கர்நாடக மாநிலம் உருவான தினமான நவம்பர் 1ல் தேதி கர்நாடக மாநிலமே திருவிழா கோலமாக இருக்கும்.  பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 100 கைதிகள் வரை நன்னடத்தை விதியின் படி வெளியேற இருக்கிறார்கள் அந்த லிஸ்டில் சசிகலா பெயரும் இருக்கிறதாம்.

இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.  ஆனால் இது எல்லாம் சசிகலாவிற்கு நன்னடத்தை சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே இதெல்லாம் நடக்கும் ஒரு வேளை டிஐஜி ரூபா கொடுத்துள்ள லஞ்சப்ப புகாரில் தீர்ப்பு மாற்றி அமைந்துவிட்டால் மொத்தமாக சொதப்பல் ஆகிவிடும் என சொல்கிறார்கள்.

click me!