அதிமுக கொடி பொருத்திய காரில் வந்த சசிகலா... மதுசூதனனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி..!

Published : Aug 06, 2021, 11:11 AM IST
அதிமுக கொடி பொருத்திய காரில் வந்த சசிகலா... மதுசூதனனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி..!

சுருக்கம்

மதுசூதனன் உடலுக்கு அதிமுக கொடி பொருத்திய காரில் வந்து சசிகலா அஞ்சலி செலுத்தினார்.   

மதுசூதனன் உடலுக்கு அதிமுக கொடி பொருத்திய காரில் வந்து சசிகலா அஞ்சலி செலுத்தினார். 

மதுசூதனன் உடல் தண்டையார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் சசிகலா மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கட்சித் தொண்டர்கள் குவிந்திருந்த நிலையில், பல்வேறு தலைவர்களும் வருகை தந்தவண்ணம் உள்ளதால் போலீஸார் அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

சில நாள்களுக்கு முன்னர் மதுசூதனனை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். அவரது குடும்பத்தினரிடம் அவர் உடல்நிலை குறித்து விசாரித்து வந்தார். மதுசூதனன் மறைவுக்கு நேற்று சசிகலா ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “மதுசூதனன் மறைவு செய்தியறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். மதுசூதனனின் மறைவு என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. சோதனையான கால கட்டங்களில் துணை நின்றவர் என்றும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் மிகுந்த பாசம் கொண்டவர்” என்று தெரிவித்திருந்தார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!