மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ஸ்டாலின்.. உணர்ச்சியில் நெகிழ்ந்த இபிஎஸ்-ஓபிஎஸ். உடைந்து அழுத சேகர்பாபு.

Published : Aug 06, 2021, 10:37 AM IST
மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ஸ்டாலின்.. உணர்ச்சியில் நெகிழ்ந்த இபிஎஸ்-ஓபிஎஸ். உடைந்து அழுத சேகர்பாபு.

சுருக்கம்

முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த சென்ற போது அங்கிருந்த ஓபிஎஸ் இபிஎஸ் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து மரியாதை பரிமாறிக் கொண்டனர். 

அதிமுகவின் மூத்த நிர்வாகியும்,  அக்கட்சியின் அவைத் தலைவருமான மதுசூதனன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  அப்போது அங்கிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் முதல்வர் ஆறுதல் கூறினார். முதலமைச்சரை பார்த்ததும் இபிஎஸ்- ஓபிஎஸ், ஆகியோர் உணர்ச்சிவயத்தில் நெகிழ்ந்தனர். 

அதிமுகவின் மூத்த முன்னோடியும், அக்காட்சியில் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் அவர்கள், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்தார். அவருக்கு வயது 81. வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்த கொரோனா பரவல் போன்ற காரணமாக அவர் நீண்ட ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 7ஆம் தேதி திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்தார். கடந்த சில தினங்களாக உயிருக்கு போராடி வந்த நிலையில் நேற்று அவர் காலமானார். 

அவரின் மறைவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று தினங்களுக்கு அதிமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், அதிமுக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது உறவினர்கள் மற்றும் அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு அவர் ஆறுதல் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்தவுடன்  இபிஎஸ்- ஓபிஎஸ், ஆகியோர் உணர்ச்சிவத்தில் நெகிழ்ந்தனர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் உடன் வந்திருந்த இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மதுசூதனனை உடலைப் பார்த்து கண் கலங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர், முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த சென்ற போது அங்கிருந்த ஓபிஎஸ் இபிஎஸ் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து மரியாதை பரிமாறிக் கொண்டனர். இது காண்போரை நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. மதுசூதனன் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!