பெங்களூரு சிறையில் சொகுசாக இருந்த சசிகலா.. வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்

By Raghupati R  |  First Published May 26, 2023, 3:15 PM IST

பெங்களூரு மத்திய சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்த போது சொகுசு வசதி ஏற்படுத்தி கொடுத்த 3 சிறை அதிகாரிகள் மீதான குற்றவியல் வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.


கடந்த 2017 ஆம் ஆண்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் காவல் உதவி ஆய்வாளராக இருந்த கஜராஜா, லஞ்சம் பெற்று சசிகலாவை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை சந்திக்க அனுமதித்த குற்றச்சாட்டை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தது. அதனைத் தொடர்ந்து, கஜராஜா, அப்போதைய தலைமைச் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் மற்றும் பெங்களூரு மத்திய சிறையின் துணைக் கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் மீது வழக்குத் தொடர மாநில அரசு அனுமதி வழங்கியது.

Latest Videos

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

இந்த அனுமதியை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பிறகு குற்றப் பத்திரிகையில் இருந்து சிறைத் துறை முன்னாள் டிஜிபி சத்தியநாராயண ராவ் நீக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்தவொரு அனுமதியையும் பெறுவதற்கு அவர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

இந்நிலையில், கிருஷ்ணகுமார் மீதும், கஜராஜா மீதும் குறிப்பிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில அரசு வழங்கிய அனுமதியை நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையும் படிங்க..Gold Rate Today : அடிச்சது ஜாக்பாட்.! நகை வாங்க சரியான நேரம் இது - எவ்வளவு தெரியுமா?

click me!