2006ஆம் ஆண்டுக்குபிறகு என் பெயரில் ஒரு சொத்து விற்றிருப்பதாகவும், 2006க்குப் பிறகு ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். எனது உறவினர்கள் வீட்டில் எத்தனை நாட்கள் வேண்டும் என்றாலும் சோதனை நடத்திக்கொள்ளட்டும் என தெரிவித்தார்.
அமைச்சரின் உறவினர் வீடுகளில் சோதனை
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லம் மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லையென்றும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை வீடுகளில் மட்டும் சோதனை நடைபெறுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருமான வரித் துறை சோதனை எனது சகோதரர் இல்லம், உறவினர்கள், நண்பர்கள் அவர்களுடைய உறவினர்கள் இல்லங்கள் என எனக்கு தெரிந்தவரை 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடப்பதாக கூறியிருக்கிறார்கள். எனது இல்லத்தில் சோதனை நடைபெறுவதாக சில தொலைக்காட்சிகள்ல செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. எனது இல்லத்தில் வருமான வரித் துறை சோதனை நடைபெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சோதனையை எதிர்கொள்ள தயார்
ஒருவேளை சோதனை நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராக இருப்பதாக கூறினார். வருமான வரித்துறை சோதனையை புதிதாக நான் எதிர்கொள்வது அல்ல. ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் இறுதிப் பிரச்சாரத்துக்கு முன்பாக, இதுபோன்ற வருமான வரித் துறையின் சோதனையை எதிர்கொண்டதாகவும் கூறினார். . கரூரில் விரும்ப தகாத சம்பங்கள் நடைபெற்றுள்ளதையடுத்து வருமான வரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்ள ஒரே போனில் அங்கிருந்தவர்களை விலகிச் செல்ல கூறினேன். ஆனால் சோதனையின்போது சாமியான பந்தல் போட்டு, சாப்பாடு போட்டார்கள் அதிமுகவினர். வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் தவறுகள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் மாற்றுக்கருத்து இல்லையென கூறினார்.
ஒரு சொத்து கூட் வாங்கவில்லை
2006க்குப் பிறகு என் பெயரில் ஒரு சொத்து விற்றிருக்கிறேன். 2006க்குப் பிறகு ஒரு சதுர அடி கூட வாங்கவில்லை. என் தம்பியின் மாமியார், அவரது மகள்களுக்கு தானமாக கொடுத்தார்.அவர் தானமாக கொடுத்ததுதான் என் தம்பி வீடு கட்டும் இடம் இதைத்தான் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக கூறினார். எவ்வளவு நாட்கள் சோதனை நடைபெற்றாலும் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார்கள். எதிர்கொள்ள எனது நண்பர்கள், உறவினர்கள் தயாராக உள்ளனர். முழு சோதனை நிறைவடைந்த பின் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். அதிகாலை நேரம் சோதனைக்கு செல்கிறவர்கள் கதவை திறப்பதற்கு முன்னாலேயே அதிகாரிகள் வீட்டிற்குள் ஏறி குதித்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்