சசிகலா, TTV,OPS மூவரும் இணையலாம்... ஆனால் அவர்கள் அதிமுகவில் இணைய முடியாது. ஜெயக்குமார் தாறுமாறு.

Published : Aug 10, 2022, 05:23 PM ISTUpdated : Aug 10, 2022, 05:28 PM IST
சசிகலா, TTV,OPS மூவரும் இணையலாம்... ஆனால் அவர்கள் அதிமுகவில் இணைய முடியாது. ஜெயக்குமார் தாறுமாறு.

சுருக்கம்

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய மூவர் வேண்டுமானால் ஒன்றாக இணையலாம் ஆனால் அவர்கள் ஒருபோதும் அதிமுகவில் இணைய முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய மூவர் வேண்டுமானால் ஒன்றாக இணையலாம் ஆனால் அவர்கள் ஒருபோதும் அதிமுகவில் இணைய முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதே அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஒலிம்பியாட் போட்டி இதைவிட சிறப்பாக நடந்திருக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை திருவிக நகரில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் 43வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அன்னதானம் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- ரெய்டு ரெய்டு என்று சொல்கிறார்கள் ஆனால் எனக்கு தெரிந்ததெல்லாம் சைக்கிள்   ரெய்டு தான், மற்ற எந்த ரெய்டும் எனக்கு தெரியாது என கிண்டலாக பேசினார். பழைய பேருந்துகளுக்கு பெயிண்ட் அடித்து விட்டு மகளிருக்கு இலவச பேருந்து என இந்த அரசு ஏமாற்றுகிறது,

இதையும் படியுங்கள்:  அதிமுக துண்டு துண்டா உடைஞ்சதுக்கு திமுக தான் காரணம்.. பாஜக இல்லை.. மனம் திறந்து பேசிய சசிகலா.

மகளீருக்கான இலவச பேருந்து திட்டம் இன்றளவும் ஒரு திட்டமாகத் தான் உள்ளது என்றார், நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது சீரழிந்து விட்டது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கூட்டு பலாத்காரம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் துக்ளக் ஆட்சி நடக்கிறது, துக்ளக் ஆட்சி என்றால் அது திமுக ஆட்சிதான் தற்போது வரை போதை பொருட்களை தடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் மாறாக எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் காவல்துறையை ஏவி வருகிறது. மக்களை காக்கும் எண்ணம் இந்த அரசிடம் முற்றிலுமாக இல்லை  என்றார். 

இதையும் படியுங்கள்: பெரியாருக்கு சிலை நான் வைக்குறேன் ... BJP ல இருந்து என்னை தூக்குனாலும் பரவாயில்ல... அமர் பிரசாத் ரெட்டி.

அப்போது சசிகலா ஒபிஎஸ் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் வேண்டுமானால் ஒன்றிணையலாம், ஆனால் அவர்கள் ஒருபோதும் அதிமுகவில் இணைய முடியாது என்றார். ஒலிம்பியாட் இறுதி விழாவில் ஜெயலிதாவின் புகைப்படம் இடம் பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா எம்ஜிஆர் தமிழகத்தை செதுக்கிய சிற்பிகள், அவர்களை தவிர்க்க முடியாதவர்கள், தவிர்க்க முடியாத மாபெரும் சக்திகள். யாரும் அவர்களது சக்திகளை மறைக்க முடியாது.

அதன் அடிப்படையில்தான் அவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன, இன்னும் கூட பல முதலமைச்சர்கள் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளனர்ஆனால் அவர்களது புகைப்படம் ஏன் வைக்கப்படவில்லை, தனது அப்பாவின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படங்களை வைத்தது போன்று தான் அது உள்ளது என்றார். அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் இதைவிட சிறப்பாக ஒலிம்பியாட் போட்டி நடத்திருக்கும் என்றார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!