
என்னை பாஜகவிலிருந்து நீங்கினாலும் பரவாயில்லை நான் பெரியாருக்கு 40 இடங்களில் சிலை வைக்கிறேன், ஆனால் அதன் கீழ் அவர் சொன்ன தமிழ் படித்தவன் காட்டுமிராண்டி எனபதை எழுதுவேன் என பாஜகவை சேர்ந்த அமர்பிரகாஷ் ரெட்டி கூறியுள்ளார்.ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பைட் மாஸ்டர் கனல்கண்ணன் பேசி சர்ச்சையாகி உள்ள நிலையில் அமர் பிரசாத் அவருக்கு ஆதரவாக இவ்வாறு பேசியுள்ளார்.
இந்து முன்னணியின் சார்பில் நடத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில்கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை உடைக்கப்பட வேண்டும், அது என்று உடைக்கப்படுகிறதோ அந்த நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்றார், அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கனல்கண்ணன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்; நான் SOFT கிடையாது.. சர்வாதிகாரியாக மாறுவேன்.! அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது, சமூகத்தில் பொதுமக்கள் மத்தியில் விரோதத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கனல்கண்ணன் திடீர்னு தலைமறைவானார். அவர் எப்போது வேண்டுமானால் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார், பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என தான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒருபுறம் உள்ள நிலையில் பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் கனல் கண்ணனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.
இதையும் படியுங்கள்; ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி கனல் கண்ணன் பேச்சுக்கு ஆதரவாக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியுள்ள அவர், பெரியார் குறித்து பேசியதற்காக கனல்கண்ணன் கைது செய்யப்பட போகிறார்கள் என கேள்விப்பட்டவுடன் நான் ஒரு டியூட்போட்டுள்ளேன். ஆனால் அவர் பேசுவதை நான் முழுமையாக கேட்கவில்லை, ஆனால் அவர் பேசிய கருத்து என்ன என்பது எனக்கு தெரியும். கோவிலுக்குள் பக்தர்கள் செல்லும்போது அந்த முட்டாள் உள்ளே போகிறான் பார் என்று சொல்வது போல, கடவுளை வணங்குபவன் முட்டாள், காட்டுமிராண்டி என்று சிலையின் கீழ் எழுதப்பட்டிருக்கிறது. இது கடவுளை கும்பிடுபவர்களை காயப்படுத்துவது ஆக உள்ளது.
எனவே கண்ணன் கண்ணன் சொல்வதில் எந்த தவறும் இல்லை, ஆனால் சிலையை உடைக்க தேவையில்லை அந்த சிலைக்கு கீழே உள்ள வாசகத்தை அழித்துவிடலாம். பாஜகவில் இருந்து என்னை தூக்கினால் பரவாயில்லை, பெரியாருக்காக 40 இடங்களில் சிலை வைக்கிறேன், ஆனால் அந்த சிலைக்கு கீழே நான் அவர் சொன்ன வசனங்களையே எழுதுகிறேன், தமிழைப் படித்தவன் காட்டுமிராண்டி என நான் அந்த சிலைக்கு கீழே எழுதி வைக்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் சிலையை உடைக்க வேண்டும் என்பது தேவையில்லாதது, அதேபோல் அந்த சிலையை கோயிலுக்கு வாசலில் வைத்ததும் தேவையில்லாதது. பெரியார் எங்கேயாவது கோவில் வாசலில் எனக்கு சிலை வையுங்கள் என்று கேட்டாரா? இவ்வாறு அமர் பிரசாத் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.