
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுகதான் முழுக்காரணம் என்றும் இதற்கு அதிமுகவில் உள்ளவர்களோ, அல்லது மத்திய அரசு காரணம் இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். மாயத்தேவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மதுரை வந்த அவர் இவ்வாளு கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறி வருகிறது. சசிகலா சிறைக்குச் சென்ற கையோடு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அதிமுகவை நிர்வகித்து வந்தனர். ஆனால் இரட்டை தலைமையின் கீழ் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்ததால் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்ன கோரிக்கை எழுந்தது.
இதையும் படியுங்கள்: பெரியாருக்கு சிலை நான் வைக்குறேன் ... BJP ல இருந்து என்னை தூக்குனாலும் பரவாயில்ல... அமர் பிரசாத் ரெட்டி.
இந்த கோரிக்கை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரால் வைக்கப்பட்டது. பின்னர் அதிமுக பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றைத் தலைமையாக நியமிக்கும் சூழல் ஏற்பட்டது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ், பொதுக் குழுவை கூட்ட அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால் நீதி மன்றம் பொதுக் குழு நடத்த அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள்: நான் SOFT கிடையாது.. சர்வாதிகாரியாக மாறுவேன்.! அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!
பின்னர் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் தரப்பினர் கைப்பற்றினர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. அதனால் வருவாய்த்துறை தலையில் அதிமுக அலுகவகத்தை பூட்டி சீல் வைத்தது. பின்னர் அது தொடர்பாக நடந்த வழக்கில் அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஓப்படைக்க நீதி மன்றம் உத்தரவு வழங்கியது.
இதனால் கட்சி பொறுப்பு முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி கையில் வந்துள்ளது. மற்புறம் அதிமுக பல துண்டுகளாக உடைந்துள்ளன. அதிமுக தொண்டர்கள் பல அணியாக பிரிந்து இருப்பதால் அதிமுகவின் செல்வாக்கும் பாதியாக குறைந்துள்ளது. இந்நிலையில் அதிமுகவில் முதல் எம்பி மாயத்தேவர் மறைவையொட்டி சசிகலா அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாயத்தேவர் இல்லத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது ஏராளமான அதிமுக தொண்டர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாயத்தேவர் மற்றும் அதிமுக வரலாற்றினை அவர் நினைவுகூர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவின் பிளவுக்கு திமுகதான் காரணம் அதிமுகவில் உள்ளவர்களோ மத்திய அரசு காரணம் இல்லை என்றார். ஆனால் பிளவுகள் அனைத்தும் விரைவில் மறைந்து அதிமுக நிச்சயம் ஒன்றுபடும் என்றார். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்று தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும் என்றார்.