அதிமுக பொன்விழா தினத்தில், ஜெ நினைவிடத்தில் விஸ்வரூபம் எடுக்க போகும் சசிகலா.?? அலர்ட் ஆகும் ஓபிஎஸ் இபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Oct 8, 2021, 12:40 PM IST
Highlights

அதேபோல் அதிமுக பொன்விழா ஆண்டில் வரும் 16ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் செல்வி. ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதல்முறையாக சசிகலா வர உள்ளதாகவும், அவர் அப்போது தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நிலவரம், சசிகலா வருகையால் தற்போது கட்சியின் நிலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து வரும் 10 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ளது. வலுவான தலைமை கட்சிக்கு இல்லாததாலும், இரட்டை தலைமையாலும் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என விமர்சிக்கப்பட்ட நிலையில் 60 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனக்குள்ள மக்கள் செல்வாக்கை மீண்டும் அதிமுக நிரூபித்துள்ளது. அதேபோல் வலுவான எதிர்க்கட்சியாகவும் அதிமுக செயல்பட்டு வருகிறது.  

இதையும் படியுங்கள்: அரசை மிரட்டி பில்டப் கொடுத்த அண்ணாமலை.. 600 பாஜகவினர் மீது கேஸ் போட்டு அலறவிட்ட தமிழக போலீஸ்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அதேபோல்  அக்டோபர் 17ஆம் தேதி என்று அதிமுக தொடங்கி 50 ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. அதிமுக பொன்விழாவை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாட வேண்டுமென அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

இந்நிலையில் அதிமுக பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் கட்சிப் பணிகள் செம்மைப் படுத்துவது, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மற்றும் சசிகலாவின் வருகையால் தற்போது கட்சியின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படியுங்கள்:  இதுதான் திமுகவின் சாதனை.. பட்டியல் போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.

அதேபோல் அதிமுக பொன்விழா ஆண்டில் வரும் 16ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் செல்வி. ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதல்முறையாக சசிகலா வர உள்ளதாகவும், அவர் அப்போது தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக அனைவரும் ஒற்றுமையுடன் எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் அக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

 

click me!