ஜெ சமாதியில் சசிகலா கண்ணீர்.. ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என ஜெயக்குமார் நக்கல்.. அதிமுகவில் இடமில்லை என பதிலடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2021, 1:02 PM IST
Highlights

சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் சசிகலா, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கட்சியின் வெற்றிக்கு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதனால், இந்த முடிவை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் ஆனால் மக்கள் அதை நம்ப மாட்டார்கள், ஆஸ்கர் விருது கொடுக்க மாட்டார்கள், எங்களைப் பொறுத்த வரையில் அவருக்கு அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, சசிகலா கண்ணீர் வடித்த நிலையில், ஜெயக்குமார் இவ்வாறு விமர்சித்துள்ளார். 

சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் சசிகலா, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கட்சியின் வெற்றிக்கு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதனால், இந்த முடிவை எடுப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் அது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இனியும் அதிமுக சீரழிவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என கூறிய சசிகலா, விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்கபோவதாக அறிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்:ஒரே கட்டமாக தேர்தல் நடந்திருந்தால், முடிவு வேற.. திமுகவின் வெற்றியை மோசமாக விமர்சித்த மாஜி ஆர்.பி உதயகுமார்.

இதையும் படியுங்கள்:  என் அண்ணன் அழகிரி படித்த கல்லூரியில் நான் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உள்ளது... உருகிய ஸ்டாலின்.

நாளை அதிமுகவின் பொன்விழா துவக்கயாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்கூட்டியே இன்று ஜெயலலிதா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவு இடங்களில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அதற்காக தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து வாகனத்தில் புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி ஜெயலலிதா நினைவிடத்தை அவரது வாகனம் அடைந்த போது, அவரது ஆதரவாளர்கள் சின்னம்மா வாழ்க என விண்ணை பிளக்கும் அளவிற்கு மழங்கினர். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார், அப்போது தன்னையும் அறியாமல் அவர் கண் கலங்கினார். அவரின் கண்ணீர் காட்சி பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை எல்லாம் அம்மாவின் நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். 

அதிமுகவையும், தொண்டர்களையும் ஜெயலலிதாவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு செல்கிறேன், என் வயதில் முக்கால்வாசி பகுதி ஜெயலலிதாவுடன் இருந்துவிட்டேன் என அவர் உருக்கமாக கூறினார். சசிகலாவின் கண்ணீர் அஞ்சலி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மொத்தத்தில் சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம், ஆனால் மக்கள் அதை நம்ப மாட்டார்கள். அவருக்கு ஆஸ்கர் விருதெல்லாம் கொடுக்க மாட்டார்கள். அதிமுக யானை பலம் கொண்டது, ஒரு கொசு யானை மீது உட்கார்ந்து கொண்டு, இந்த யானையை நான்தான் தாங்கிக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்வது நகைப்புக்குரியது. எங்களைப் பொறுத்தவரையில் சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை, அமமுகவில் அவருக்கு இடம் கொடுக்கட்டும் என அவர் விமர்சித்தார்.

 

click me!