ஜெ நினைவிடத்தில் சசிகலா கண்ணீர்.. சின்னம்மா வாழ்க.. விண்ணை பிளந்த முழக்கம்.. அதிர்ந்த மெரினா.

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2021, 12:07 PM IST
Highlights

மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி வந்த அவரது வாகனம், சென்னை மெரினா கடற்கரையை அடைந்தபோது, அவரது ஆதரவாளர்கள் தியாகத் தலைவி சின்னம்மா வாழ்க என விண்ணைப் பிளக்க முழங்கினர்.  மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெயலிதா நினைவிடத்திற்கு வந்து அவரது தோழி சசிகலா அங்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் அது உணர்ச்சிபூர்வமாக இருந்தது. சிறையிலிருந்து விடுதலை ஆனதுவுடன் அதிரடிராக அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, தமிழக சட்டமன்ற தேர்தலின் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக திடீரென அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். 

இந்நிலையில் தற்போது உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையிலான அதிமுக படுதோல்வி சந்தித்துள்ள நிலையில், மீண்டும் அவர் அதிமுக தொண்டர்களை சந்தித்திக்க உள்ளார். அதிமுக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தொண்டர்களை  சந்தித்தால் அதிமுக தொண்டர்கள் தனது தலைமையின் கீழ்  திரள வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் சசிகலா இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒரே கட்டமாக தேர்தல் நடந்திருந்தால், முடிவு வேற.. திமுகவின் வெற்றியை மோசமாக விமர்சித்த மாஜி ஆர்.பி உதயகுமார்.

இந்நிலையில் காலை சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து அவர் புறபட்ட நிலையில் வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி வந்த அவரது வாகனம், சென்னை மெரினா கடற்கரையை அடைந்தபோது, அவரது ஆதரவாளர்கள் தியாகத் தலைவி சின்னம்மா வாழ்க என விண்ணைப் பிளக்க முழங்கினர்.  மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரையும் அறியாமல் அவரது கண்கள் கலங்கியது. 

இதையும் படியுங்கள்: என் அண்ணன் அழகிரி படித்த கல்லூரியில் நான் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உள்ளது... உருகிய ஸ்டாலின்.

பின்னர் எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் நினைவிடங்களிலும் அவர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து ச சிகலா வை வாழ்த்தி முழக்கமிட்டனர்.  சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக தனது அரசியல் பிரவேசத்தை ஓத்தி வைத்திருந்த சசிகலா தற்போதைய தீவிர அரசியல் களத்தில் குதித்திருப்பது, அதிமுகவை கையில் வைத்துள்ள ஓபிஎஸ் -இபிஎஸ் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 
 

click me!