ஒரே கட்டமாக தேர்தல் நடந்திருந்தால், முடிவு வேற.. திமுகவின் வெற்றியை மோசமாக விமர்சித்த மாஜி ஆர்.பி உதயகுமார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2021, 11:37 AM IST
Highlights

மொத்தத்தில் திமுக பெற்ற வெற்றி  சூழ்ச்சி செய்து பறிக்கப்பட்ட வெற்றி, ஒரே கட்டமாக தேர்தல் நடந்திருந்தால் இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் நடந்து இருக்காது. அதிமுகவின் வரலாற்றில் இதுவரை மக்கள் நம்மை கைவிட்டனர் என்ற வரைலாறே கிடையாது.  

ஊரக உள்ளாட்சி தேர்தலில் சூழ்ச்சி செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது என்றும் அது மக்கள் கொடுத்த வெற்றி அல்ல, பறிக்கப்பட்ட வெற்றி என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நாளை அதிமுகவில் 50வது ஆண்டு பொன்விழா துவக்க நாள் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, மதுரை மேற்கு மாவட்டம் சார்பில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். 

இதையும் படியுங்கள்: ஜெ சமாதியில் சசிகலா கண்ணீர்.. ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என ஜெயக்குமார் நக்கல்.. அதிமுகவில் இடமில்லை என பதிலடி.

அப்போது பேசிய அவர், அதிமுக தோற்றுவித்த 50 ஆண்டு கால வரலாற்றில் பல வெற்றி தோல்விகளை நாம் சந்தித்துள்ளோம். ஊரக உள்ளாட்சி தேர்தல்  தீர்ப்பு என்பது நிரந்தரமல்ல, இன்று ஆளுங்கட்சியினர் அதிகாரத்தை கைப்பாவையாக செயல்படுத்தி உள்ளனர். சட்டமன்றத் தேர்தலையே நாம் ஒரே கட்டமாக நடத்திய நிலையில், ஆனால்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தி ஆளும் கட்சியினர் சூழ்ச்சி செய்துள்ளது. திருமங்கலம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் இறந்த வாக்காளர்கள், ராணுவத்தில் பணிபுரியும் வாக்காளர்கள் ஆகியோரின் வாக்குகள் பதிவு செய்து முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்தபலனும் இல்லை. 

இதையும் படியுங்கள்: மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன்.. சசிகலா உருக்கம்.

மொத்தத்தில் திமுக பெற்ற வெற்றி  சூழ்ச்சி செய்து பறிக்கப்பட்ட வெற்றி, ஒரே கட்டமாக தேர்தல் நடந்திருந்தால் இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் நடந்து இருக்காது. அதிமுகவின் வரலாற்றில் இதுவரை மக்கள் நம்மை கைவிட்டனர் என்ற வரைலாறே கிடையாது.  50 ஆண்டுகால அதிமுக அரசியல் வரலாற்றில் 11 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது இதில் 7 முறை வெற்றி பெற்று 30 ஆண்டுகள் நாம் மக்களுக்கு பணியாற்றியுள்ளோம் என அவர் கூறினார்.
 

click me!