என் அண்ணன் அழகிரி படித்த கல்லூரியில் நான் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உள்ளது... உருகிய ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2021, 11:09 AM IST
Highlights

கலைஞருடைய குடும்பத்தில் இருந்து என் அண்ணன் அழகிரி லயோலா கல்லூரியில் தான் படித்தார். அதேபோல என் மகன் உதயநிதி ஸ்டாலினும் இந்த கல்லூரியில் தான் படித்தார், முரசொலி மாறனின் மூத்தமகன் கலாநிதி மாறன் இங்குதான் படித்தார், 

என் அண்ணன் அழகிரியும், என் மகன் உதயநிதியும் படித்த இந்த கல்லூரியில் நான் படிக்காமல் போய் விட்டேனே என்ற ஏக்கம் எனக்கு இப்போது வந்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், மேலாண்மை கல்வி  நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி, தயாநிதி மாறன், அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவுக்கும் இந்த கல்லூரிக்கும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் இந்த கல்லூரிக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

கலைஞருடைய குடும்பத்தில் இருந்து என் அண்ணன் அழகிரி லயோலா கல்லூரியில் தான் படித்தார். அதேபோல என் மகன் உதயநிதி ஸ்டாலினும் இந்த கல்லூரியில் தான் படித்தார், முரசொலி மாறனின் மூத்தமகன் கலாநிதி மாறன் இங்குதான் படித்தார், அதேபோல திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதி மாறனும் இந்த கல்லூரியில் படித்தார், ஆனால் இந்த கல்லூரியில் நான் படிக்காமல் போய் விட்டேனே என்ற ஏக்கம் எனக்கு இப்போது வந்துள்ளது. அந்த ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த கல்லூரியில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும், தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடக்கும்போதெல்லாம், ரிசல்ட் எப்போது வரும் என்று லயோலா கல்லூரியின் வாசலில்தான் நாங்கள் காத்துக் கொண்டிருப்போம். நான் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் லயோலா கல்லூரியில் வாக்கு  என்னப்பட்டு இங்கிருந்துதான்  அறிவிப்புகள் வரும், இப்போது நான் முதலமைச்சராக இருக்கிறேன் என்றால், இந்த லயோலா கல்லூரியில்தான் ஓட்டு எண்ணப்பட்டு இங்கிருந்து தான் நான் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்தது. அதன் பிறகுதான் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். 

இதையும் படியுங்கள்:  அதிரடியாக வெளியில் வந்த சசிகலா..15 பவுன்சர்கள், 500 பேரை அதிமுக தலைமை அலுவகத்திற்கு பாதுகாப்பு போட்ட OPS-EPS.

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

அதனால்தான் சொல்கிறேன் லயோலா கல்லூரிக்கும் எங்கள் குடும்பத்திற்குமான உறவு நெருக்கமானது. என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் எத்தனையோ இருந்தாலும், இந்த கல்லூரியை நிச்சயமாக என்னால் மறக்க முடியாது என அவர் கூறினார். இந்த லயோலா கல்லூரிக்கு 95 ஆண்டு கால பாரம்பரியம் இருக்கிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் நூற்றாண்டு விழாவை காண போகிறது. அந்த நூற்றாண்டு விழாவிலும் நான் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த கல்லூரி உருவாக்கிய லட்சக்கணக்கான மாணவர்கள் உலகமெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அறிவுத் துறையில், தொழில் துறையில் சிறந்தவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். லயோலா குடும்பம் என்பது பல லட்சம் மாணவர்களை கொண்ட குடும்பம், இந்த கல்லூரி மேலும் தழைக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார்.
 

click me!