கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லையா.? அமைச்சரை கேள்விகளால் துளைத்த தமிழக MP.

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2021, 10:34 AM IST
Highlights

இட ஒதுக்கீடு பற்றிய தகவல்கள் ஒவ்வொரு பணிநியமன அறிக்கையில் வெளிப்படையாக தர வேண்டாமா? இதுபோன்ற மீறங்கள் அனுமதிக்கக்கூடாது. உடனே ஒன்றிய அமைச்சர் தலையிட வேண்டும் என்று கோரியிருந்தேன்.

கேந்திர வித்யாலயா பள்ளி ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு இடம்பெறாதது  குறித்து மத்திய கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கடிதம் மூலம் தான் கொண்டு சென்றுள்ளதாகவும், அக்கடித த்தின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாகவும்,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- 

ஏதாவது ஒரு மீறல் கவனத்திற்கு வந்த வண்ணம் உள்ளது, இம்முறை கேந்திர வித்யாலயா... ஒரு பணி நியமன அறிக்கை சென்னை ஐஐடி, சி.எஸ்.ஆர்.ஐ கேந்திரிய வித்யாலயாவால்  13-10-2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிற்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், யோகா ஆசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. அதற்கான வாக் இன் இன்டர்வியூ  20-10-2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:ஜெ நினைவிடத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிடப்போகும் சசிகலா.. உச்சகட்ட பீதியில் ஓபிஎஸ்-இபிஎஸ்.

இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை 14-10-2021 அன்று அனுப்பியிருந்தேன், அதில் நான் எழுதியுள்ள கேள்விகள்: இது நிரந்தர காலியிடங்களை நிரப்ப " கொல்லைப்புற வழியா.? "மொத்த பணியிடங்கள் எவ்வளவு.? காலியாக இருப்பவை எவ்வளவு.? அவற்றை நிரப்ப நிரந்தர பணி நியமங்களுக்கு என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏன் ஓராண்டுக்கு முன்பாகவே அடுத்த ஆண்டுக்கான தேவையை கணக்கில்கொண்டு பணி நியமனங்களை நடத்தக்கூடாது. இந்த அறிவிப்பில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு குறித்து எதுவுமே ஏன் ஒரு வரி கூட சொல்லப்படவில்லை. தற்காலிக நியமங்களில் கூட இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்றெல்லாம் உள்ள அரசின் உத்தரவுகள் அமலாக வேண்டாமா.

இதையும் படியுங்கள்:ஆதிதிராவிட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை.. ஜெ மறைவோடு முடிந்துவிட்டது. அடித்து சொல்லும் ரவிக்குமார் MP.

இட ஒதுக்கீடு பற்றிய தகவல்கள் ஒவ்வொரு பணிநியமன அறிக்கையில் வெளிப்படையாக தர வேண்டாமா? இதுபோன்ற மீறங்கள் அனுமதிக்கக்கூடாது. உடனே ஒன்றிய அமைச்சர் தலையிட வேண்டும் என்று கோரியிருந்தேன். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் பரிசீலனைக்கு எனது கடிதம் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலுவலகம் பதிலளித்துள்ளது. உரிய நடவடிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!