ஜெ நினைவிடத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிடப்போகும் சசிகலா.. உச்சகட்ட பீதியில் ஓபிஎஸ்-இபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2021, 9:59 AM IST
Highlights

அதேபோல் விரைவில் அவர் தமிழகம் முழுவதும் செய்ய உள்ள அரசியல் சுற்றுப்பயண அறிவிப்பை ஜெயலிதா சமாதியில் சசிகலா இன்று அறிவிக்க  வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் மலர்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. சிறையிலிருந்து விடுதலை  ஆனது முதல் அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தலின் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அவர் அதிரடியாக அறிவித்தார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இதையும் படியுங்கள்: ஜெ நினைவிடத்தில் மையம் கொள்ளும் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ்.. உளவுத்துறை High Alert. பாதுகாப்புக்கு 3000 போலீஸ்.

இந்நிலையில் தற்போது உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையிலான அதிமுக படுதோல்வி சந்தித்துள்ள நிலையில், மீண்டும் அவர் அதிமுக தொண்டர்களை சந்தித்திக்க திட்டமிட்டுள்ளார். அதிமுக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தொண்டர்களை சந்தித்தால் அதிமுக தொண்டர்கள் தனது தலைமையின் கீழ்  திரள வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் சசிகலா இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று சசிகலா காலை 11 மணி அளவில் சென்று மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் எம்ஜிஆர், அண்ணா ஆகியோர் சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். இந்நிலையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 

இதையும் படியுங்கள்: ஆதிதிராவிட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை.. ஜெ மறைவோடு முடிந்துவிட்டது. அடித்து சொல்லும் ரவிக்குமார் MP.

அதேபோல் விரைவில் அவர் தமிழகம் முழுவதும் செய்ய உள்ள அரசியல் சுற்றுப்பயண அறிவிப்பை ஜெயலிதா சமாதியில் சசிகலா இன்று அறிவிக்க  வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நாளை காலை 10:30  மணி அளவில் சசிகலா சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்று  அஞ்சலி செலுத்துகிறார். கொரோனா தொற்று, சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக தனது அரசியல் பிரவேசத்தை ஓத்தி வைத்திருந்த சசிகலா தற்போதைய தீவிர அரசியல் களத்தில் குதித்திருப்பது, அதிமுகவை கையில் வைத்துள்ள ஓபிஎஸ் -இபிஎஸ் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

click me!