அந்த ஆறு பேருக்கு நன்றி.. உள்ளாட்சி தேர்தலில் குனிய வைத்து கும்மிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்!

By Asianet TamilFirst Published Oct 16, 2021, 9:55 AM IST
Highlights

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு ஓட்டுப் போட்ட 6 பேருக்கு நன்றி தெரிவித்து துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளார் தோல்வியடைந்த வேட்பாளர்.
 

காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூர் ஊராட்சியில் 9-ஆவது வார்டு தேர்தலில் போட்டியிட்ட ஓ.முத்து என்பவர் 6 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார். வழக்கமாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு செய்து போஸ்டர்கள் ஒட்டுவார்கள். ஆனால், தேர்தலில் படுதோல்வியடைந்த வேட்பாளர் ஒ.முத்து நன்றி தெரிவித்து துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள பாயிண்டுகள்தான் சுவாரசியமானவை.
துண்டு பிரசுரத்தில், “எனது அன்பான பென்னலூர் ஊராட்சியின் 9-வது வார்டு சொந்தங்களுக்கு எனது நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தோல்வி அளித்ததற்கு நன்றி எதற்கு என்று கேட்கலாம். வாக்குகளில் என்னை தோற்கடித்து வாழ்க்கையி ஜெயிக்க கற்றுக் கொடுத்துள்ளீர்கள். 25 சதவீதம் பந்தத்தின் பிடியில் ஓட்டு பிரிந்தது. 25 சதவீதம் பணத்தின் பிடியில் ஓட்டு பிரிந்தது. 25 சதவீதம் பாட்டிலின் பிடியில் ஓட்டு பிரிந்தது. 25 சதவீதம் நம்ப வைத்து பொய்யாக்கி ஓட்டு பிரிந்தது. உங்கள் அனைவரையும் பற்றி புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.

ஆறுதலுக்காக 6 ஓட்டு போட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. மொத்தத்தில் தோற்று ஜெயித்துள்ளேன். உடைந்துபோவேன் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் போல எனது பொதுசேவை தொடரும். இப்படிக்கு ஓ.முத்து” என்று தோல்வியடைந்த வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

click me!