மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன்.. சசிகலா உருக்கம்.

Published : Oct 16, 2021, 12:25 PM ISTUpdated : Oct 16, 2021, 02:19 PM IST
மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன்.. சசிகலா உருக்கம்.

சுருக்கம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன் என்றும், என் வயதில் முக்கால் பகுதியை ஜெயலலிதாவுடன் இருந்துவிட்டேன் என்றும் உருக்கமாக கூறினார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன் என்றும், என் வயதில் முக்கால் பகுதியை ஜெயலலிதாவுடன் இருந்துவிட்டேன் என்றும் சசிகலா உருக்கமாக தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் நான்கரை ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

சிறையிலிருந்து விடுதலை ஆனதுவுடன் அதிரடிராக அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, தமிழக சட்டமன்ற தேர்தலின் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக திடீரென அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் தற்போது உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையிலான அதிமுக படுதோல்வி சந்தித்துள்ள நிலையில், மீண்டும் அவர் அதிமுக தொண்டர்களை சந்தித்திக்க உள்ளார். அதிமுக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தொண்டர்களை  சந்தித்தால் அதிமுக தொண்டர்கள் தனது தலைமையின் கீழ்  திரள வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் சசிகலா இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஜெ சமாதியில் சசிகலா கண்ணீர்.. ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என ஜெயக்குமார் நக்கல்.. அதிமுகவில் இடமில்லை என பதிலடி.

இந்நிலையில் இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் ஜெ நினைவிடம் நோக்கி அவர் புறபட்ட நிலையில் வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி வந்த அவரது வாகனம், சென்னை மெரினா கடற்கரையை அடைந்தபோது, அவரது ஆதரவாளர்கள் தியாகத் தலைவி சின்னம்மா வாழ்க என விண்ணைப் பிளக்க முழங்கினர்.  மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரையும் அறியாமல் அவரது கண்கள் கலங்கியது. பின்னர் எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் நினைவிடங்களிலும் அவர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து சசிகலாவை வாழ்த்தி முழக்கமிட்டனர்.பின்னர் எம்ஜிஆர் நிறைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.  

இதையும் படியுங்கள்: ஜெ நினைவிடத்தில் சசிகலா கண்ணீர்.. சின்னம்மா வாழ்க.. விண்ணை பிளந்த முழக்கம்.. அதிர்ந்த மெரினா.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன் என்றும், என் வயதில் முக்கால் பகுதியை ஜெயலலிதாவுடன் இருந்துவிட்டேன் என்றும் உருக்கமாக கூறினார். அதிமுகவையும் தொண்டர்களையும் ஜெயலலிதாவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் காப்பாற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.

 
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!