சசிகலா கிளம்பிட்டாங்க .....அடுத்து எம்எல்ஏக்கள் நகர்வு  எங்கே ...?

 
Published : Feb 15, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சசிகலா கிளம்பிட்டாங்க .....அடுத்து எம்எல்ஏக்கள் நகர்வு  எங்கே ...?

சுருக்கம்

கூவத்தூர்:

சசிகலா  ஆதரவு எம் எல்  ஏக்கள் கடந்த ஒரு வார காலமாக , கூவத்தூர்  ரிசார்ட்டில்  தங்க  வைக்கப்பட்டு இருந்தனர்.  அதாவது சசிகலா  கட்டுப்பாட்டில் அவர்கள் அனைவரும்  கூவத்தூர்  ரிசார்ட்டில் இருந்ததாக  தகவல்  வெளியானது . இந்நிலையில் தற்போது சசிகலா  இளவரசி  சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும்  சொத்து  குவிப்பு  வழக்கில்,  தண்டனை  பிறப்பித்தது  உச்சநீதிமன்றம் .  இதனை தொடர்ந்து பெங்களூரு  நீதிமன்றத்தில் ஆஜராக தற்போது  சசிகலா கார்டனில் இருந்து புறப்பட்டார்.

 எம் எல் ஏக்கள் :

கூவதூரில்  தங்கி இருந்த எம் எல் ஏக்களில்    சில   எம் எல் ஏக்கள்  மறைமுகமாக ஒ பி எஸ்  அணிக்கு  ஆதரவு  தெரிவித்தனர். இந்நிலையில்,  சில  எம் எல் ஏக்கள்  எப்படியோ ஒரு வழியாக, சசிகலா  கட்டுப்பாட்டில்  இருந்து வெளியே  வந்து  பன்னீர்  அணிக்கு  அதரவு  தெரிவித்தனர் . மேலும் ஒரு எம் எல் ஏ  மாறு  வேடத்தில்  வெளியே  தப்பித்து வந்து  பன்னீர்  அணிக்கு  ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா  பிடியில் இருந்து விடுபடுவார்களா  எம் எல் ஏக்கள் ?

அதாவது சசிகலா ஆதரவு எம் எல் ஏக்களில் ஒரு குறிப்பிட்ட  எம் எல் ஏக்கள்  மட்டுமே , தொடர்ந்து அவர்களின் மனநிலையையும் , சசிகலாவிற்கு  தாங்கள் கொடுக்கும் ஆதரவையும் செய்தியாளர்களிடம்  தெரிவித்து வந்தனர். அப்படியென்றால் , மற்ற எம் எல் ஏக்களின் மனநிலை  எப்படி இருக்கிறது  என்ற கேள்வி   வலுக்கிறது

மற்ற எம் எல் ஏக்கள் :

இந்நிலையில்,  சசிகலா  தற்போது பெங்களூரு  நீதிமன்றத்திற்கு புறப்பட்டதால்,  மற்ற  எம் எல் ஏக்களின்  நிலை  எப்படி இருக்கும் ? மறைமுகமாக   ஒ பி எஸ்  அணிக்கு ஆதரவு தெரிவித்ததாக வெளிவந்த தகவலை அடுத்து , தற்போது மேலும் பல எம் எல் ஏக்கள்  பன்னீர்  அணிக்கு ஆதரவு  தெரிவிப்பார்கள்  என  எதிர்ப்பார்க்கப் படுகிறது.

எடப்பாடி   பழனிசாமி

 இந்த தருணத்தில்,  அதிமுக சட்டமன்ற தலைவராக  எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டு,  தன்னை  ஆட்சி  அமைக்க  அழைப்பு  விடுக்க வேண்டும் என  ஆளுநரிடம்  கடிதம்  கொடுத்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஆளுனர் இன்னும்  பழனிசாமியை  ஆட்சி அமைக்க  அழைக்க வில்லை. இதிலிருந்து சட்ட பேரவையில் பன்னீர்   மற்றும்  எடப்பாடி  பழனிசாமி  ஆகிய  இருவருக்கும்  பெரும்பான்மை  நிரூபிக்க வேண்டிய கட்டாயம்  ஏற்படும்  என்ற  எதிர்பார்க்கப் படுகிறது.

 

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!