ஐசியூவில் இருக்கும் சசிகலா உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்..!

Published : Jan 25, 2021, 12:38 PM IST
ஐசியூவில் இருக்கும் சசிகலா உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்..!

சுருக்கம்

பெங்களூர் மருத்துவமனை ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் மருத்துவமனை ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா நாளை மறுநாள் விடுதலையாக இருந்த நிலையில் கடந்த 20ம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சசிகலா உடல்நிலை தொடர்பாக விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்:- ஐசியூவில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.  சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உணவு உட்கொள்கிறார். சசிகலாவுக்கு படிப்படியாக கொரோனா தொற்று குறைந்துள்ளது. சசிகலா எழுந்து உட்கார்ந்து, உதவியுடன் நடக்கிறார்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனையும் படிப்படியாக குறைந்து வருகிறது. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசிக்கும் திறன் சீராக உள்ளது. அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்.அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!