பள்ளிக்கூட மாணவிக்கு திருமண ஆசை.. ஊரைவிட்டு ஓடிய காதல் ஜோடி.. காதலன் போக்சோ சட்டத்தில் கைது.

Published : Jan 25, 2021, 12:17 PM IST
பள்ளிக்கூட மாணவிக்கு திருமண ஆசை.. ஊரைவிட்டு ஓடிய காதல் ஜோடி.. காதலன் போக்சோ சட்டத்தில் கைது.

சுருக்கம்

ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து அவருடன் வெளியூருக்கு தப்ப முயன்ற வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்துள்ளனர். 

ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து அவருடன் வெளியூருக்கு தப்ப முயன்ற வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்துள்ளனர். விருதுநகரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்களை காதலிப்பதுபோல் நடித்து பலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவது. ஆசைவார்த்தைகாட்டி நகை பணம் பறிப்பது, காதலிக்க மறுக்கும் பெண்களை தாக்குவது. தீவைத்து எரிப்பது போன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 

 

இதை தடுக்க காவல்துறை எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவரிசையில் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர் ஈஸ்வரன் வயது 22 இவர் எலக்ட்ரானிக் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடந்த 17ஆம் தேதி அவரை கூப்பிட்டுக்கொண்டு  ஈஸ்வரன் வெளியூருக்குத் தப்பினார். 

இதையறிந்த  மாணவியின் தாயார் மாரீஸ்வரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது  இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் அருகே பல்லடத்தில் இருப்பதாக சூலக்கரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் பல்லடம் சென்று அவர்களை மீட்டு வந்தனர். மாணவியை கடத்திச் சென்ற ஈஸ்வரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!