எம்.ஜி.ஆரை யார் வேண்டுமானலும் சொந்தம் கொண்டாடலாம். சசிகலா அம்மையார் உடல்நலம் பெற வேண்டும். எஸ்ஏசி அதிரடி.

Published : Jan 25, 2021, 11:33 AM IST
எம்.ஜி.ஆரை யார் வேண்டுமானலும் சொந்தம் கொண்டாடலாம். சசிகலா அம்மையார் உடல்நலம் பெற வேண்டும். எஸ்ஏசி அதிரடி.

சுருக்கம்

தலைவர் நல்லவராக இருந்தால் தான் ஊர் ஊர் நல்லாயிருக்கும் இது போலதான் நாடும் என்றார். மொத்தத்தில் தமிழர்களுக்கு நல்லதை செய்பவர்கள் தான் ஆட்சியில் வரவேண்டும் என அவர் கூறினார். 

சசிகலா அம்மையார் நோய் தொற்றில் இருந்து தப்பி வரவேண்டும் அதற்காக நான் பிரார்த்தனை செய்வேன் என திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் தெரிவித்துள்ளார். நேற்று கன்னியாகுமரி  மாவட்டம் அஞ்சுகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அழகப்பபுரம் அருகே திருமூலநகர்  மலை குகை மாதா புனித தோமையார் தேவாலயம் திறப்பு விழா நடைப்பெற்றது. 

கலப்பை மக்கள் இயக்க  தலைவர் திரைப்பட இயக்குனர் பி.டி. செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற தேவாலய திறப்பு விழாவில், திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் கலந்து கொண்டு புதிய தேவலயத்தை  திறந்து வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட  ஆயர் ஸ்டிபன் ஆண்டகை  புதிய தேவாலயத்தில் முதல் திருப்பலியை நடத்தினார்.  இவ்விழவில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், நடிகை பவி டீச்சர் மற்றும் அப்பகுதி ஊர் மக்கள் ஏராளமனோர்கள் கலந்து கொண்டனர். இவ் விழாவிற்கு முன்னதாக அஞ்சுகிராமத்தில் வைத்து   திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர்  செய்தியாளர்களை  சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், சசிகலா அம்மையார் நோய் தொற்றில் இருந்து தப்பி வரவேண்டும் அதற்காக நான் பிரார்த்தனை செய்வேன் என்றார். எம்.ஜி.ஆரை யார் வேண்டுமானலும் சொந்தம் கொண்டாடலாம் என்று கூறிய எஸ்.ஏ. சந்திர சேகர்,  நான் நல்லவராக இருந்தால் தான் என் வீடு நல்லாயிருக்கும் அதுபோலத்தான் தலைவர் நல்லவராக இருந்தால் தான் ஊர் ஊர் நல்லாயிருக்கும் இது போலதான் நாடும் என்றார். மொத்தத்தில் தமிழர்களுக்கு நல்லதை செய்பவர்கள் தான் ஆட்சியில் வரவேண்டும் என அவர் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!