நாளை மறுநாள் விடுதலை... பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் சசிகலா...!

Published : Jan 25, 2021, 11:25 AM IST
நாளை மறுநாள் விடுதலை...  பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரும் சசிகலா...!

சுருக்கம்

4 வருடம் சிறைத்தண்டனைக்கு பிறகு நாளை மறுநாள் விடுதலையாகும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

4 வருடம் சிறைத்தண்டனைக்கு பிறகு நாளை மறுநாள் விடுதலையாகும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். இந்த நிலையில், எதிர்பாரா விதமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அவருக்கு அதீத சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு முதலிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனால், அவரது ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்தனர். 

இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா அங்கிருந்தபடியே விடுதலையாவார் என்று கூறப்படுகிறது. பின்னர், பிப்ரவரி முதல் வாரம் சசிகலா தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா நினைவு நாளான 3ம் தேதி பெங்களூருவில் இருந்து சசிகலா சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பும் சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!