"நீங்க சொல்றப்போ என்னால வரமுடியாது" - ஐடி'யை டென்ஷனாக்கிய சசி கடிதம்! காரணம் என்ன?

 
Published : Jan 23, 2018, 09:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
"நீங்க சொல்றப்போ என்னால வரமுடியாது" - ஐடி'யை டென்ஷனாக்கிய சசி  கடிதம்! காரணம் என்ன?

சுருக்கம்

Sasikala said I cant come to the Inquiry

பெங்களுரு சிறையில் இருக்கும் சசிகலா மவுன விரதம் இருப்பதால் வருமான வரித்துறை விசாரணைக்கு தம்மால் முடியாது' என சசிகலா கடிதம் அனுப்பியுள்ளார்.

சசிகலா குடும்பத்தினர் வீடு, அலுவலகங்கள், கம்பெனிகள் ஆகியவற்றில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள், நகைகள், பணம், வைரங்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. ஆவணங்களை வரிவிடாமல் ஆய்வு செய்துவரும் வருமானவரித்துறையினருக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டது. இதனையடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. வருமானவரித்துறையினர் தேடி வந்த தடயங்கள் கிடைத்ததும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அப்போது போயஸ் கார்டன் வீடு முழுமையாக சோதனை நடத்தப்படவில்லை.

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பின் சசிகலாவை விசாரணை நடத்த நோட்டிஸ் அனுப்பிய நிலையில் தற்போது அந்த நோட்டீஸுக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இந்த கடிதத்தில், கடந்த சில நாட்களாக நான் மவுன விரதம் இருக்கிறேன். மவுன விரதம் இருப்பதால் வருமான வரித்துறை விசாரணைக்கு தம்மால் முடியாது' என கூறியிருக்கிறார். தாம் வருவதாக இருந்த அடுத்த மாதம் 10 வரை விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றார். மௌனவிரதம் முடித்துவிட்டு அதற்கு பின் நடக்கும் விசாரணையில் கலந்து கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனால் வருமான வரித்துறை ஆணையமோ இன்னும் இந்த கடிதம் மீது இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும் அடுத்த விசாரணை தேதி மாற்றம் குறித்த எந்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடவில்லை.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்