ஏழை, எளிய மக்களால் தாங்க முடியாது …. ப்ளீஸ் குறைச்சிடுங்க…. கெஞ்சும் இசையமைப்பாளர் !!  

 
Published : Jan 23, 2018, 08:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ஏழை, எளிய மக்களால் தாங்க முடியாது …. ப்ளீஸ் குறைச்சிடுங்க…. கெஞ்சும் இசையமைப்பாளர் !!  

சுருக்கம்

bus fare hike.G.V.Prakash kumar demand

விவசாய, ஏழை,எளிய  உழைக்கும் மக்களால் தாங்க முடியாது என்பதால் பேருந்து கட்டண உயர்வைத் தாங்க முடியாது என்பதால், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இகையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அண்மையில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. 108 சதவீத அளவுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் 25 சதவீதத்தை அரசு பேருந்து கட்டணத்துக்கு செலவிடும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே பணமதிப்பிழப்பு  நடவடிக்கை ,   ஜிஎஸ்டி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடும் இன்னலுக்கு ஆளாகிவரும் பொதுமக்கள், தற்போது இந்த பேருந்து கட்டண உயர்வால் மேலும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். அதில் விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்து கட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்