சசி கணவர் நடராஜனை ஜெயலலிதா செம அடி அடித்தார்... மதுசூதனன் பகீர் தகவல்...

 
Published : Jan 23, 2018, 06:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
சசி கணவர் நடராஜனை ஜெயலலிதா செம அடி அடித்தார்... மதுசூதனன் பகீர் தகவல்...

சுருக்கம்

no connection between Natarajan and ADMK says Madhusudhanan

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல தொலைகாட்சிக்கு பேட்டியளித்த சசிகலா கணவர் நடராஜன்...  ஜெயலலிதா வாசித்த அறிக்கைகள் எல்லாமே நான் எழுதி கொடுத்தவை தான். நான் போட்டு கொடுத்த இலவச திட்டங்கள் தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றன. ஜெயலலிதாவிடம் வாழ்நாள் முழுவதும் இருந்த நல்ல விஷயம் நான் எழுதிக் கொடுத்த அனைத்து விஷயங்களையும் ஒரு கமா, புல்ஸ்டாப் இல்லாமல் அப்படியே பின்பற்றி வெற்றியை கண்டார் என கூறினார்.

இந்நிலையில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் குறிஞ்சிப்பாடியில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் பேசிய மதுசூதனன்  ஒரு சின்ன பையன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் நான் தான் ஜெயலலிதாவுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தேன் என சொல்லி இருக்கிறார். அவர் யாருக்கு என்ன சொல்லிக் கொடுத்தார் என்று கூறி இருக்கிறார் தெரியுமா மறைந்த இதயதெய்வம் புரட்சித்தாலைவி அம்மாவுக்குத்தான் எல்லாமே சொல்லிக் கொடுத்தேன் என பேசியிருக்கிறார்.

இன்னைக்கோ நாளைக்கோ போகிற மாதிரி இருக்கும் இவர், நான் தான் எல்லாத்தையும் எல்லாமே சொல்லிக் கொடுத்தேன், தமிழகத்திற்கான எல்லா திட்டங்களையும் நான் தான் வகுத்தக் கொடுத்ததாக என மார்தட்டி சொல்கிறார். ஆமாம், இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறார், இவருக்கு பதில் சொல்வதற்கு அவர்கள் இல்லை என்பதற்க்கா? நான் அவரை கேட்கிறேன், நடராஜனுக்கு தாலி எடுத்துக் கொடுத்தது யார்? அதிமுகவை வைத்து திமுகவை சேர்ந்தவர்களுக்குத் தான் நடராஜன் அனைத்தும் செய்து கொடுத்துள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் இரு அணிகளாக செயல் பட்டபோது சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டார் அப்போது 41 லட்சம் ரூபாய் மிச்சம் வைத்திருந்தார். அப்போது சசிகலாவிடம் ஜெயலலிதா மீதி இருக்கும் அந்தப் பணம் எங்கே எனக் கேட்டதற்கு சசிகலா தனது நடராஜன் எடுத்துக் கொண்டு போய் நிலம் வாங்கி விட்டார் என சொன்னார். இதனால் கடுமையாக கோபமடைந்த ஜெயலலிதா நேரடியாக சென்று நடராஜனை கையில் கிடைத்த ஏதோ ஒன்றை வைத்து அடி அடின்னு அடித்தார்கள்.

அன்றிலிருந்து நடராஜனுடன் யார் தொடர்பு வைத்தாலும் அவர்களை கட்டம் கட்டியவர் தான் அம்மா. நடராஜனுக்கும் அதிமுகவிற்கும் என்ன தொடர்பு? இன்று எல்லாவற்றையும் மறைத்து நாடகமாடுகிறார். ஆணவத்தில் ஆடாதே... உன்னை அழிப்பதற்கு சாட்சியாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருக்கிறார் என்று மதுசூதனன் காட்டமாகச் சொன்னார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!