அடுத்த தடவ  தம்பிதுரைக்கு இருக்கு...! எச்சரிக்கை விடுத்த மத்திய பாஜக...!

 
Published : Jan 23, 2018, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
அடுத்த தடவ  தம்பிதுரைக்கு இருக்கு...! எச்சரிக்கை விடுத்த மத்திய பாஜக...!

சுருக்கம்

pon.rathakirushnan warned to thambidurai

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வெற்றி பெறும் எனவும் அடுத்த முறை அண்ணன் தம்பிதுரைக்கு நிலைமை என்னவென்று புரியவரும் எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  ஆளும் அதிமுகவைச் சேர்ந்த மதுசூதனன் தோல்வியடைந்தார். திமுக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட்டை இழந்தன.

குறிப்பாக  பாஜக சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன், நோட்டாவைவிட மிகக் குறைவான வாக்குகளே பெற்றிருந்தார். இது அக்கட்சிக்கு பெரும் அவமானமாக கருதப்பட்டது. ஒரு தேசிய கட்சி நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்றதால் சமூக வலைத்தளங்களில் வருத்தெடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை,தமிழகத்தைக் பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும், நோட்டாவுக்கும்தான் கடுமையான போட்டி நிலவி வருவதாக கிண்டல் செய்தார்.   

தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் என்றுமே மதிப்பு இருந்ததில்லை என்று கூறிய தம்பிதுரை, அக்கட்சிகள் திராவிட கட்சிகளுடன் கூட்டண வைத்துக் கொண்டால்தான் ஒரு சில  இடங்களில் ஜெயிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வெற்றி பெறும் எனவும் அடுத்த முறை அண்ணன் தம்பிதுரைக்கு நிலைமை என்னவென்று புரிய வரும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். 
 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு