போங்கய்யா நீங்களும் உங்க பஸ்சும்! அந்த காலத்துக்கே திரும்பிய பொதுமக்கள்!

 
Published : Jan 23, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
போங்கய்யா நீங்களும் உங்க பஸ்சும்! அந்த காலத்துக்கே திரும்பிய பொதுமக்கள்!

சுருக்கம்

Go to the cart and submit to the collector

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்பப்பெறக்கோரி கோவையில், மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் தமாகாவினர் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் 70 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மாணவ-மாணவிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். திருப்பூர், தஞ்சை, நாகை, திருவள்ளூர் மாவட்டம் போன்னேரி பேருந்து நிலையம், கோவை உள்ளிட்ட இடங்களில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால், தமிழகம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. 

அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கோவை பேருந்து நிலையத்தில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் வாக்களித்தனர். பொதுமக்கள் அளித்த வாக்குகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.  

அது மட்டுமல்லாது, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், காலாவதியான பேருந்துகள்தான் இயக்கப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், புதிய பேருந்துகளாக மாற்றி இயக்க வேண்டும் என்று கூறி புதுகை ஆட்சியரிடம் இளைஞர் ஒருவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்தனர். தமாகாவின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா, மாவடட் ஆட்சியர் அரிகரனிடம் மனு அளித்தார். பேருந்து கட்டண உயர்வு பொதுமமக்களை கடுமையாக பாதித்திருப்பதாகவும், கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேடும் என்றும், இந்த கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்த இருப்பதாகவும் யுவராஜா தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு