பாஜகவுக்கும் யாருக்கும் போட்டி தெரியுமா ? செம்மையா கலாய்த்த தம்பிதுரை !!

First Published Jan 23, 2018, 5:23 PM IST
Highlights
competition between BJP and NOTA.Thambidurai told


தமிழகத்தைக் பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும், நோட்டாவுக்கும்தான் கடுமையான போட்டி நிலவி வருவதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கிண்டல் செய்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  ஆளும் அதிமுகவைச் சேர்ந்த மதுசூதனன் தோல்வியடைந்தார். திமுக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட்டை இழந்தன.

குறிப்பாக  பாஜக சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன், நோட்டாவைவிட மிகக் குறைவான வாக்குகளே பெற்றிருந்தார். இது அக்கட்சிக்கு பெரும் அவமானமாக கருதப்பட்டது. ஒரு தேசிய கட்சி நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்றதால் சமூக வலைத்தளங்களில் வருத்தெடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழகத்தில் நடிகர் கட்சிதொடங்குவது என்பது நகைச்சுவையாக உள்ளது என்று தெரிவித்தார்.

நடிகர்கள் கட்சித் தொடங்கியதும் எம்ஜிஆர் போல ஆகிவிட நினைக்கிறார்கள். ஆனால் எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிடமுடியாது என தம்பிதுரை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தைக் பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும், நோட்டாவுக்கும்தான் கடுமையான போட்டி நிலவி வருவதாக கிண்டல் செய்தார்.   

தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் என்றுமே மதிப்பு இருந்ததில்லை என்று கூறிய தம்பிதுரை, அக்கட்சிகள் திராவிட கட்சிகளுடன் கூட்டண வைத்துக் கொண்டால்தான் ஒரு சில  இடங்களில் ஜெயிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

click me!