அரசியலில் பதட்டப்படுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான்...! செம்ம பன்ச் கொடுத்த ஆண்டவர்...!

 
Published : Jan 23, 2018, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
அரசியலில் பதட்டப்படுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான்...! செம்ம பன்ச் கொடுத்த ஆண்டவர்...!

சுருக்கம்

This is what I am saying to those who are nervous

நாம் வெற்றியை நோக்கி  பயணித்து கொண்டிருப்பதாகவும் அதனால் பதட்டப்பட வேண்டாம் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவ்வபோது ஆளுங்கட்சியான எடப்பாடி ஆட்சியை விமர்சித்து வந்தார். இதற்கு அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஆனால் நடிகர் கமல் அதற்கு பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்து வந்தார். இவை அனைத்தையும் தமது டுவிட்டர் மூலமே பரப்பி வந்தார். அதற்கும் மீடியாக்கள் செவி சாய்த்தன. 

இதையடுத்து அவர் களத்தில் இறங்கட்டும் அப்புறம் பேசட்டும் என அமைச்சர்கள் ஏவி விட்டனர். அதே போல் தாம் அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமல் தெரிவித்தார். 

இந்நிலையில் நேற்று முதல் நாட்களாக ரசிகர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார் கமல். அதைதொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக சிவகாசி, ராசிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள் மத்தியில் நடிகர் கமலஹாசன் பேசினார். 

அப்போது, நாம் வெற்றியை நோக்கி  பயணித்து கொண்டிருப்பதாகவும் அதனால் பதட்டப்பட வேண்டாம் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

தற்போது மக்களை நோக்கி நமது பயணம் தொடங்கியுள்ளது எனவும் கமல் ரசிகர்கள் மத்தியில் சாதி, மத பேதம் கிடையாது எனவும் குறிப்பிட்டார். 

கோஷங்கள் கூட கண்ணியமாக இருக்க வேண்டும் எனவும் தமது பாதை மிகவும் நீளமானது எனவும் குறிப்பிட்டார். 

இதற்கு முன் ரசிகர்களை எந்த கட்சி என கேட்டது கிடையாது எனவும்  இனி கேட்பேன் எனவும் தெரிவித்தார். 

மக்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்வதால் வெற்றி நிச்சயம் எனவும் நமது பயணம் கஜானாவை நோக்கி செல்லவில்லை எனவும் குறிப்பிட்டார். 
 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!