
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டன.
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு 18 எம்.எல்.ஏக்களுக்கும் பேரவை செயலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்க எம்.எல்.ஏக்கள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், இதற்கிடையே கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார்.
இந்த தகுதிநீக்கத்தை எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்றுடன் முடிந்தது. எம்.எல்.ஏக்கள், முதல்வர், பேரவை செயலாளர் என அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. அனைத்து தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை முன்வைத்துள்ளனர்.
இதையடுத்து எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.