BREAKING சசிகலா விடுதலையாகும் தேதி உறுதியானது.. சிறைத்துறையே வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. அலறும் அதிமுக.!

Published : Jan 25, 2021, 01:56 PM IST
BREAKING சசிகலா விடுதலையாகும் தேதி உறுதியானது.. சிறைத்துறையே வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. அலறும் அதிமுக.!

சுருக்கம்

விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலையாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலையாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2017, பிப்ரவரி 14-ம் தேதி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 4 வருடங்களாக சிறையில் உள்ள இவர்களின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. 

இதனிடையே சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகையை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி செலுத்தப்பட்டது. எனவே, இம்மாதம் 27ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும் சில சிக்கல் இருப்பதாக தகவலும் வெளியானது. ஆனால், ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவது பற்றி அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்துள்ளது என வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிறைத்துறை தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, விடுதலையாகும் நேரத்தில் சசிகலாவுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது, சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சுயமாக உணவு எடுத்துக்கொள்வதாகவும், உதவியோடு எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், சசிகலா வரும் 27ம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சிறையில் சசிகலா விடுதலை தொடர்பான அனைத்து ஆவண பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27ம் தேதி மருத்துவமனையில் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று முறையாக சிறைத்துறை விடுக்க உள்ளது.  

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!