சசிகலா விடுதலை விவகாரம்... சிரித்துக்கொண்டே ஒரே வார்த்தையில் முடித்த எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Sep 22, 2020, 4:58 PM IST
Highlights

வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் செய்து கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் இன்று பங்கேற்றார். மாவட்டத்தில் ரூ.70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், ரூ.24.24 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளையும் நேரில் தொடங்கி வைத்தார். 15,805 பயனாளிகளுக்கு ரூ.72.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- நான் விவசாயிதான்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது. அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினால் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவர முனைப்பு காட்டியவர் திமுக தலைவர் ஸ்டாலின். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்தான். 3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக எதிர்க்கும்.  வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

அப்போது சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து அதிமுகவுடன் இணைந்து செயல்பட நினைத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் பதிலளிக்காமல் சிரித்துக்கொண்டே இந்த கேள்வி கேட்க இது சரியான இடம் இல்லை. ஏனென்றால் ராமநாதபுரத்தின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், வளர்ச்சிப் பணிகளை பார்வையிடவும் இங்கு வந்திருக்கிறோம் என்றார்.

click me!