ஸ்டாலின் ஜோசியம் பார்க்கிறார்... நாங்கள் மக்களை தான் பார்க்கிறோம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Sep 22, 2020, 4:40 PM IST
Highlights

ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும் வேளாண் மசோதாக்களை சரத்து தெரியாமல் பேசி வருகிறார். நான் ஒரு விவசாயி என்பதால் விசாயிகளுக்கு எது பாதிப்பு என்பது எனக்கு தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும் வேளாண் மசோதாக்களை சரத்து தெரியாமல் பேசி வருகிறார். நான் ஒரு விவசாயி என்பதால் விசாயிகளுக்கு எது பாதிப்பு என்பது எனக்கு தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. தமிழகத்தில்தான் அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்; ஒப்பந்தத்தில் உள்ளபடியே விவசாயிகளுக்கு விலை கிடைக்கும். இடைத்தரகர் இன்றி விளை பொருட்களை விற்பனை செய்யலாம். 

Latest Videos

வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்டுள்ளோம். விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பிற மாநிலங்களில் சந்தைவரி 3 சதவீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. 282 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், பேசிய முதல் வேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். மு.க.ஸ்டாலின் எதற்காக வேளாண் மசோதாக்களை எதிர்க்கிறார் என்றே தெரியவில்லை. ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும் வேளாண் மசோதாக்களை சரத்து தெரியாமல் பேசி வருகிறார். நான் ஒரு விவசாயி என்பதால் விசாயிகளுக்கு எது பாதிப்பு என்பது எனக்கு தெரியும். 

5 - 6 மாதத்தில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என ஸ்டாலின் கூறிவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் "ஸ்டாலின் ஜோசியம் பார்க்கிறார் போல, நாங்கள் ஜோசியம் பார்ப்பதில்லை; மக்களை தான் பார்க்கிறோம் என்றார்.

click me!