சசிகலா உறவினர்கள் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு! நெருக்கடியில் சசிகலா குடும்பத்தினர்!

 
Published : Dec 27, 2017, 06:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
சசிகலா உறவினர்கள் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு! நெருக்கடியில் சசிகலா குடும்பத்தினர்!

சுருக்கம்

Sasikala relatives house ID at home! Sasikala family in crisis!

சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், விசாரணையின்போது வெளியான தகவல்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது மீண்டும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வருமான வரிததுறை சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், பணம் என கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, சசிகலாவின் உறவினர்கள் கிருஷ்ணபிரியா, விவேக், உள்ளிட்ட பலர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 

இந்த விசாரணையின் அடிப்படையில் ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில் தற்போது சசிகலாவின் உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தி வருகிறது. தாம்பரம் படப்பையில் உள்ள மிடா1 நிறுவனம், ஸ்ரீசாய் காட்டன் நிறுவனம் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தி வருகிறது. சென்னை, அடையாறில் உள்ள கார்த்திகேயன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

சசிகலாவின் தொடர்புடைய வீடுகளில் சோதனை நடத்தப்பட்டாலும், விசாரணையின்போது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையிலேயே தற்போது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது நடத்தப்பட்டு வரும் சோதனையில் ஒவ்வொரு இடத்திலும் சுமார் 10 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போதும் சோதனை நடத்தப்பட்டு வருவது அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?
விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!