எடப்பாடியை "இடிச்சபுளி"யாக பெயர் மாற்றி விக்கிப்பீடியாவில் விஷமிகள் குறும்பு!

First Published Dec 27, 2017, 6:08 PM IST
Highlights
Edappadi palanisamy name change as Edichapuli Pazhanisamy in Wikipedia


தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை "இடிச்சபுளி பழனிசாமி" என்று பெயர் மாற்றி விஷமிகள் குறும்பு செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குக்குப்பின், அதிமுகவில் வார்த்தைப்போர் வலுவாக அதிகரித்து வருகிறது, அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசுவது. தரை மட்டத்திற்கு இரங்கி பேசுவது என மக்களுக்கு பணியாற்றும் தலைமையில் இருந்துகொண்டு பேசுவது நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது.

இந்த வார்த்தைப் போர், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அதிமுக தலைமை கழகத்தில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பின் தினகரன் ஆதரவாளர்களை மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்கியதற்கு “ஆமைத் தலையர், காமெடியன்” எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை “இடிச்சப்புளி பழனிச்சாமி” உருவ கேலி செய்து கிண்டலடித்தார்.

இந்நிலையில்,  தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை "இடிச்சபுளி பழனிசாமி" என்று பெயர் மாற்றி விஷமிகள் குறும்பு செய்துள்ளனர்.  மரியாதைக்குரிய இடத்தில் முதல்வர் என்ற பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் பெயரை இப்படி மாற்றி விஷமிகள் விளையாடிவருகின்றனர்.

ஏற்கனவே, இணையத்தில் தகவல் களஞ்சியமாக கருதப்படும் விக்கிப்பீடியா இணையதளத்தில் ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பெயரை "டுமிலிசை" என பெயர் மாற்றினார். அதேபோல பாஜக மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரை பொறி உருண்டை என மாற்றி சில கள் குறும்புத்தனத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

click me!