
அ.இ.அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.சசிகலா புஷ்பா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மை நிலை வேண்டும் என பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநருக்கு சசிகலா புஷ்பா எழுதியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது
முதல்வர் ஜெயலலிதாவின் கையொழுத்தை போலியாக போட்டு அவருக்கு எதிராக சதி செய்ய அவரை சுற்றி உள்ள ஒரு கும்பல் முயற்சி செய்கிறார்கள் என நான் அச்சப்படுகிறேன்.
முதல்வரின் கையெழுத்தை போலியாகப் போட்டு, துணைப் பொதுச்செயலாளரை நியமிக்க அவருக்கு எதிராக பெரிய சதியும், முயற்சியும் நடக்கிறது. அதேபோல போலிக் கையொழுத்து மூலம், தமிழக அரசு நிர்வாகத்தையும் நடத்தவும் முயற்சிகள் நடக்கின்றன.
அதாலால் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் எந்த விதமான உத்தரவுக் கடிதமோ, கோப்புகளோ ஆளுநருக்கு வந்தால், அந்த கையொழுத்தை தீவிரமாகவும், கவனமாகவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
அவரின் உடல்நிலை குறித்து உண்மைநிலை வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.