"உங்க முதலாளி கிட்ட பேசுவேன்" - டெல்லியில் பத்திரிக்கையாளர்களை மிரட்டிய சசிகலா புஷ்பா

Asianet News Tamil  
Published : Oct 11, 2016, 03:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
"உங்க முதலாளி கிட்ட பேசுவேன்" - டெல்லியில் பத்திரிக்கையாளர்களை மிரட்டிய சசிகலா புஷ்பா

சுருக்கம்

சசிகலா புஷ்பா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் சராமாரியாக கேள்விகளை கேட்டனர். இதன் எதிரொலியாக பத்திரிக்கையாளர்களை அவரது உதவியாளர் வாக்குவாதம் செய்ய இது பற்றி முறையிட சென்ற பத்திரிக்கையாளர்களை நீங்கள் எந்த சானல் நீங்கள் எந்த சானல் என்று கேட்டு உங்க முதலாளியிடம் பேசிக்கொள்கிறேன் என மிரட்டியுள்ளார்.

சசிகலா புஷ்பா அதிமுகவில் தூத்துக்குடி மேயராக இருந்து பின்னர் ஜெயலலிதாவின் அபிமானத்தை பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அதிரடி அரசியலுக்கு பெயர் போன சசிகலா  டெல்லி ஏர்போர்ட்டில் திருச்சி சிவாவை அறைந்ததால் விவகாரம் பெரிதானது. அதன்பின்னர் போயஸ் தோட்டத்துக்கு அழைக்கப்பட்ட அவர் விசாரித்து அனுப்பப்பட்டார்.

மறுநாள் மாநிலங்கவையில் திடீரென தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய சொன்னதாகவும், திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கேட்பதாகவும் பேசி பரபரப்பூட்டினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அதிமுக தலைமைக்கு எதிராக சசிகலா புஷ்பா பேச ஆரம்பித்தார்.

அவர் பேட்டி அளிக்கும் போது அவருக்கு ஆதரவாக கேள்வி கேட்கும்போது சந்தோஷமாக பதில் சொல்லும் அவர் யாராவது மடக்கி கேள்வி கேட்டால் நீங்கள் எந்த பத்திரிக்கை எந்த சானல் என கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். 

முதலில் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக் விமர்சித்து வந்த அவர் , ஜெயலலிதா மருத்துவமனியில் அனும்திக்கப்பட்டது முதல் தனது பாணியை மாற்றிக்கொண்டு முதல்வர் நல்லவர்தான் அவருக்கு பின்னால் உள்ள கும்பல் தான் காரணம் , இப்போதும் முதல்வர் சொன்னால் ராஜினாமா செய்ய தயார், முதல்வர் உடல் நிலை பற்றி உண்மை தெரிய வேண்டும் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரது பேட்டியை பெரிதாக போட்ட பத்திரிக்கைகள் சானல்கள் பிறகு அவரை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில் இன்றும் வழக்கம் போல் டெல்லி நார்த் அவின்யூவில் உள்ள எம்பிக்கள் குடியிருப்பில் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இன்றும் தனது பேட்டியில் முதல்வர் உடல் நிலை பற்றி விமர்சிக்க செய்தியாளர்கள் சசிகலா புஷ்பாவிடம் சில கேள்விகளை வைத்தனர். இதை அவர் எதிர்பார்க்கவில்லை.

நீங்கள் சாதாரண எம்பி த்தானே. உங்களை எம்பி ஆக்கியது உங்கள் கட்சித்தலைமை, கட்சித்தலைமை என்றால் ஜெயலலிதா எனபதும் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் சசிகலா என்பதும் கட்சியில் எல்லோரும் ஏற்றுக்கொண்ட விஷயம் நீங்களும் ஏற்றுக்கொண்டு தான் இருந்தீர்கள். இப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவுடன் இந்த பிரச்சினையை பெரிதாக கிளப்புகிறீர்களே என்று கேட்டனர். 

கட்சியில் உள்ளவர்களே சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் வைத்து ஏற்றுக்கொண்ட பின், உங்களுக்கு என்ன பிரச்சினை. எந்த கட்சி ஆள வேண்டும் என மக்கள் தான் தீர்மானிப்பார்கள். மக்களே அவர்களை ஏற்றுக்கொண்டார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று கேட்டனர். 

முதலமைச்சர் மருத்துவமனையில் இருக்கும் போது, சசிகலா கும்பல் உடன் இருப்பதாக, சந்தேகத்தை எழுப்புகிறீர்கள் ஆனால், சசிகலாதான், முதலமைச்சருக்கு நெருக்கமானவர் என்பது அவராலயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

இதை கேள்வியை தி.மு.க.தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர். அப்போது இந்த கேள்வி எழவில்லையே. இதற்கு சசிகலாவால் பதில் சொல்ல முடியவில்லை. இதன்பின்னர், வெளியே வந்த செய்தியாளர்கள் சசிகலா புஷ்பா உறவினர்கள் தேடிதேடிப்பிடித்து பணம் அடங்கிய கவரை கொடுத்துள்ளார். 

இதனால், கோபமடைந்த செய்தியாளர்கள், டெல்லியில் இல்லாத புது வழக்கமாக இருக்கிறதே. பணம் தேவைப்படுவோர்களுக்கு கொண்டு போய் கொடுங்கள் இதுஎன்ன புது பழக்கம் என்று கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா புஷ்பா உதவியாளர் செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், சசிகலா புஷ்பாவிடம் செய்தியாளர்களிடம் முறையிடச் சென்றனர். 

அப்போது, சசிகலாபுஷ்பா செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நீங்கள் யார் எந்த பத்திரிகை. எந்த சேனல் . என்று கேட்டு உங்கள் முதலாளியிடம் பேசிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம்.

கேள்வி கேட்பது எங்கள் தொழில் கவர் வாங்குவது எங்கள் தொழில் அல்ல. எங்களுக்கு எங்கள் நிறுவனம் சம்பளம் கொடுக்கிறது என சொல்லிவிட்டு சென்றனர். 
டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
CBSE Language Policy : மும்மொழி கொள்கை மாணவர்களுக்கு கூடுதல் சுமை - அண்ணாமலை கடும் எதிர்ப்பு