“காமெடி செய்கிறார் டிடிவி.தினகரன்...” - கலாய்க்கிறார் சசிகலா புஷ்பா

 
Published : Jun 07, 2017, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
“காமெடி செய்கிறார் டிடிவி.தினகரன்...” - கலாய்க்கிறார் சசிகலா புஷ்பா

சுருக்கம்

sasikala teasing ttvdhinakaran

அதிமுகவை நான் வழி நடத்துவேன் என டிடிவி.தினகரன் தெரிவித்தார். இதை, நன்றாக காமெடி செய்கிறார் என சசிகலா புஷ்பா கலாய்த்து கூறினார்.


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போயஸ் கார்டன் வீட்டில் தன்னை தாக்கியதாக எம்பி சசிகலா புஷ்பா புகார் கூறினார். இதனால், அதிமுகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும், தன்னை எம்பி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மிரட்டுவதாகவும், தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார். இதுகுறித்து பிரதமர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் அகியோரிடம் புகார் தெரிவித்து வந்தார்.


இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தெரிவிக்க வேண்டும். அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் வரை சென்றார்.


ஜெயலலிதா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்த சசிகலா, அவரது மறைவுக்கு பின் அதில் மர்மம் இருக்கிறது. அதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பேசினார். சசிகலா புஷ்பாவின் திடீர் மாற்றம், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.


தற்போது, அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக சசிகலா புஷ்பா பேசி வருகிறார். ஆனால், அவர் அந்த அணியில் உள்ளாரா என்பது கேள்வி குறியாகவே இருக்கிறது.


இதைதொடர்ந்து அதிமுக பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரை விமர்சித்து பேட்டி அளித்து வருகிறார்.


இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில், எம்பி சசிகலா புஷ்பா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுக அம்மா அணி சார்பில் வெளியிடப்படும் பேட்டிகள் மற்றும் அறிக்கைகளில் உண்மை இல்லை.


முதலமைச்சர் எடப்பாடி அணியினர், 4 ஆண்டுகள் பதவியை தக்க வைக்க சசிகலாவை சின்னம்மா என புகழ்வதும், அவர் சிறைக்கு சென்ற பின்னர் ஒதுக்கி வைப்பதாக நாடகமாடுவதும் வேடிக்கையாக இருக்கிறது.


அதிமுகவை வழிநட்டுதவதாகவும், தானே எல்லாம் என்று தினகரன் பேசி வருவது காமெடியாகவே இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவே டிடிவி.தினகரன் இப்படி பேசுகிறார் என்பது வெட்டவெளிச்சமாக உள்ளது.


ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவே போராடி வரும் தமிழக அரசு, எந்த வகையிலும் மக்களுக்கு நன்மை அளிக்காத, செயல்படாத அரசாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்